கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பரபரப்பு... மடக்கிப் பிடித்த கோவை மக்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பரபரப்பு-வீடியோ

    கோவை: கோவை உக்கடத்தில் அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடடதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை உக்கடம் ஆத்துப்பாலம் வழியாக நேற்றிரவு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. இந்த லாரி அதிக வேகத்தில் சென்றதால் அந்த லாரியை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.

    அந்த லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் பிரகாஷை பொதுமக்கள் ஏன் இப்படி செல்கிறாய் என கேள்வி கேட்டுள்ளனர்.அப்போது அவர் முண்ணுக்கு பின் முரணமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கண்டெய்னரில் ஏராளமான பணம் கட்டுக்கட்டாக கொண்டுசெல்வதாக அங்கிருந்தவர்கள் சந்தேகத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தேனியில் வச்சு செய்த முதல்வர்.. ஓ.பி.எஸ் மகனுக்காக அதி தீவிர பிரச்சாரம்...14 இடங்களில் பேசினார்!தேனியில் வச்சு செய்த முதல்வர்.. ஓ.பி.எஸ் மகனுக்காக அதி தீவிர பிரச்சாரம்...14 இடங்களில் பேசினார்!

    டீத்தூள் பாக்கெட்

    டீத்தூள் பாக்கெட்

    இதனிடையே பணம் கட்டுக்கட்டாக இருப்பதாக பரவிய தகவலால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து கண்டெய்னர் லாரியை திறக்க முயற்சித்தனர். தகவல் அறிந்து பறக்கும் படை போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.அப்போது போலீசாரிடமும், பொதுமக்களிடமும் டிரைவர் பிரகாஷ் தான் கொண்டுசெல்வது டீத்தூள் தான் என்று கூறியுள்ளார்.

    லோசான தடியடி

    லோசான தடியடி

    ஆனால் நம்ப மறுத்த மக்கள் அதனை தங்கள் முன் திறந்துகாட்ட வேண்டும் என கோரினர். இதையடுத்து பொதுமக்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினார்கள். ஆனால் மறுத்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.அதன்பின் போலீசாரால் கண்டெய்னரின் பூட்டை உடைக்க முடியவில்லை. இதனால் லாரியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.

    டீத்தூள் கண்டெய்னர்

    டீத்தூள் கண்டெய்னர்

    அங்கு திமுக உட்பட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கண்டெய்னரை போலீசார் திறந்தனர். அதில் இருந்த பண்டல்களை சோதனையிட்டபோது அதில் 12 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டீத்தூள்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த டீத்தூள் வெள்ளக்கிணறுவில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    எதிர்க்கட்சிகள் கோரிக்கை

    எதிர்க்கட்சிகள் கோரிக்கை

    எனினும் லாரியில் உள்ள அனைத்து மூட்டைகளையும் இறக்கி சோதனையிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனால், அனைத்து மூட்டைகளையும் இறக்கி ஆய்வு செய்த பின்னரே கண்டெய்னர் லாரி விடுவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறினார்கள். கோவையில் இந்த கண்டெய்னர் லாரியால் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த தேர்தலில் போது கோவை அருகே சுமார் ரூ.600 கோடி பணம் கண்டெய்னரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Yesterday night Mystery Container seized by coimbatore people, police inquiry to driver
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X