இந்த ஆட்சியே மகளிருக்கான ஆட்சி என்பது உங்களுக்கு தெரியும்.. கோவையில் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் மத்திய பாஜக அரசு வாக்களிக்காத தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் அவர்களுக்கு இடமில்லை எனும் வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார். மேலும் சாதனை என்றால் பெண்கள், பெண்கள் என்றால் சாதனை என்று மகளிருக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் பேசினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நீலகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் 1703 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். இதேபோன்று ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கொடிசியா மைதானத்தில் ஒரே நேரத்தில் வள்ளி கும்மி நடனமாடிய 10,000 பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த ஆண்டு 16,000 பெண்கள் ஒரே நேரத்தில் வள்ளி கும்மி அரங்கேற்றம் செய்து கின்னஸ் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- மகளிர் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் திமுக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மகளிர் நலனே முக்கியம் என்று செயல்பட்டு வருகிறது. சாதனை என்றால் பெண்கள், பெண்கள் என்றால் சாதனை. இந்த ஆட்சியே மகளிருக்கான ஆட்சி என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. அவர்களுக்கு வாக்களிக்காத தமிழகத்தை பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் அவர்களுக்கு இடமில்லை எனும் வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். தொகுதி மறுவரையறை குறித்து பேச பிரதமரிடம் நேரம் கேட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஸ்டாலின் பேசுகையில், "திமுக ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு வந்ததா. இல்லை. கலைஞர் இருக்கும் போது வந்ததா. இல்லை. ஏன் ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு வந்ததா, அப்போதும் இல்லை. ஆனால் எடப்பாடி ஆட்சியில் நீட் தேர்வு தமிழகத்தில் வந்துவிட்டது. எங்களை பற்றி எடப்பாடி கேட்கிறார். நீட் விலக்கு ரகசியம் என்ன என்று. நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நிச்சயம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருந்தோம்.
ஆனால் இப்போது ஒரு சவால் விடுகிறேன் எடப்பாடி பழனிசாமிக்கு. உங்களுக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் மீது அக்கறை இருந்தால், பாஜக கூட்டணிக்கு போவதற்கு முன்னாடி நீட் விலக்கு செய்தால் தான் கூட்டணி வைப்போம் என்று பாஜகவிடம் சொல்ல முடியுமா?" என்று ஸ்டாலின் பேசியிருந்தார்.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications