15 வயசு சிறுமி.. கடத்தி கல்யாணம்.. 5 மாசத்தில் கைக்குழந்தை வேறு.. இளைஞரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்
கோவை: 15 வயசு சிறுமியை கடத்தி கல்யாணம் செய்து.. அந்த பொண்ணு கூட குடும்பம் நடத்தி.. 5 மாசத்தில் குழந்தையும் பெற்றிருக்கிறார் அஜித்குமார்! இப்போ மாமியார் வீட்டுக்கு அள்ளிக்கிட்டு போய்ட்டாங்க போலீசார்!
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜித்குமார். 20 வயசாகிறது. பைக்குகள் சேல்ஸ் பண்ணும் வேலை பார்க்கிறார்.

இவர் கடந்த 2016-ம் வருஷம் 15 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி பழகி உள்ளார். அந்த பெண் அஜித்குமார் மீது அதிக நம்பிக்கை வைக்கவும், அதையே சாக்காக வைத்து கடத்தி கொண்டு போய்விட்டார்.
மகளை காணோம் என்று பெற்றோர் போலீசில் புகார் தந்து இறுதியில் மீட்டனர். ஆனால் அஜித்குமார் திரும்பவும் அதே சிறுமியை கடத்தி கொண்டு போனார். கல்யாணமும் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகி, இப்போது 5 மாசத்தில் பெண் குழந்தை உள்ளது.
அது மட்டும் இல்லை.. சிறுமியை தினந்தோறும் அடித்து கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் இதையெல்லாம் பொறுக்க முடியாத சிறுமி அங்கிருந்து தப்பி, திடீரென கைக்குழந்தையை தூக்கி கொண்டு பெற்றோர் வீட்டுக்குள் தஞ்சம் அடைந்தாள்.
நடந்த விஷயங்களை அறிந்த பெற்றோர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications