கோவையில் நண்பன் இறந்தது தெரியாமல்.. விபத்தை ஏற்படுத்திய இளைஞரை மருத்துவமனையில் சேர்த்து உதவிய இளைஞர்
கோவை: கோவை போத்தனூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். கார்த்தியும் அவருடன் படித்து வந்த சிவா என்பவரும் கல்லூரி முடிந்ததும் பகுதி நேரமாக ஓட்டலில் வேலை செய்து வந்தார்கள். இந்நிலையில் கார்த்திக் நடந்து வந்த போது விபத்தில் சிக்கி புதர் செடிக்குள் மயங்கி விழுந்தார். இது தெரியாமல் அவரது நண்பர் சிவா, விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் வந்த தேனி இளைஞரை காப்பாற்றி அவருக்காக விடிய விடிய மருத்துவமனையில் காத்துக்கிடந்தார்.
நடந்து செல்வோருக்கு இப்போது உள்ள சாலைகள் பாதுகாப்பானதாக இல்லை என்கிற அளவிற்கு வாகன நெருக்கம் எல்லா ஊரிலும் அதிகரித்துவிட்டது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் நடந்து சென்றால், இருட்டில் சரியாக கவனிக்காமல் வாகன ஓட்டிகள் விபத்தினை ஏற்படுத்துவது அடிக்கடி நடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரங்களில செல்லும் போது, நடந்து செல்வோர் மீது மோதுவது அடிக்கடி நடக்கிறது. கோவையில் நடந்து சென்ற கல்லூரி மாணவருக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை போத்தனூர் காளிபுரத்தை சேர்ந்தவ 21 வயதாகும் கார்த்திக் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.காம். 3-ம்ஆண்டு படித்து வந்தார். கார்த்திக்கும் அவருடன் படிக்கும் சிவா என்பவரும் கல்லூரி முடிந்ததும் அங்கு உள்ள ஓட்டலில் பகுதிநேர வேலை செய்து வந்தார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக்கும், சிவாவும் இரவுப்பணி முடிந்து 2 பேரும் தங்கி இருந்த விடுதிக்கு நடந்து சென்றுள்ளார்கள். இருவரும் ஒரே சமயத்தில் நடந்து செல்லவில்லை..
மாணவர் கார்த்திக் ஓட்டலில் பணி முடிந்து முன்னால் சென்று கொண்டிருக்க, சிறிது இடைவெளிவிட்டு பின்னால் சிவா நடந்து சென்று கொண்டிருந்தார். சிவாவிற்கு தன் முன்னால் கார்த்திக் நடந்து சென்றது தெரியவில்லை.. கார்த்திக் ரூமிற்கு போய்விட்டதாக நினைத்துக் கொண்டு நடந்து சென்றுள்ளார். அப்போது எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் அருகே தேனியை சேர்ந்த ஷெர்னிக்குட்டி (21) என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். ஆனால் அவர் நிலைதடுமாறி கார்த்திக் மீது மோதியுள்ளார். இதில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள புதர்செடிக்குள் விழுந்தார். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஷெர்னிக்குட்டியும் பலத்த காயம் அடைந்தார்.
இதற்கிடையே கார்த்திக்குக்கு பின்னால் நடந்து வந்த சிவா, படுகாயம் அடைந்து கிடந்த ஷெர்னிக்குட்டி விபத்தில் அடிபட்டு இருப்பதை கண்டு, காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் கார்த்திக் விபத்தில் சிக்கி சாலையோர புதர்செடிக்குள் கிடப்பதை பார்க்கவில்லை. கார்த்திக் ரூமிற்கு சென்று இருப்பார் என நினைத்த சிவா, தேனி வாலிபரை மருத்துவமனையில் சேர்த்து இரவு முழுவதும் பாதுகாப்புக்காக அங்கேயே இருந்துள்ளார்.
இதனிடையே விபத்தில் சிக்கி விடிய விடிய உயிருக்கு போராடிய கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே காலையில் விடுதிக்கு வந்து பார்த்தபோதுதான், கார்த்திக் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது. இந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விபத்து தொடர்பாக போக்குவரத்து பிரிவு போலீசார் தேனி இளைஞர் ஷெர்னிக்குட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications