அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது புகார்- இலங்கை மின்வாரிய தலைவர் பெர்டினாண்டோ திடீர் ராஜினாமா
கொழும்பு: இலங்கை மன்னார் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்திட்டத்தை அதானி குழுமத்துக்கு கொடுத்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது புகார் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை மின்சார வாரிய தலைவர் பெர்டினாண்டோ இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.
Recommended Video
இந்தியாவின் தென் கடல் எல்லையான மன்னார் வளைகுடாவில் மிக பிரம்மாண்டமான காற்றாலை, சூரியமின்சக்தி திட்டத்தை இலங்கை, அதானி குழுமத்துக்கு வழங்கி உள்ளது. மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமக்கு நெருக்கடி கொடுத்ததாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே என்னிடம் தெரிவித்தார் என இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் பெர்டினாண்டோ கூறியிருந்தார். இலங்கை நாடாளுமன்ற குழுவின் விசாரணையில் இதனை பெர்டினாண்டோ தெரிவித்தார்.

இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, இந்திய பிரதமர் மோடி, அதானிக்காக நெருக்கடி கொடுத்தார் என தாம் கூறவே இல்லை என மறுத்தார்.
இதனையடுத்து இலங்கை மின்சார வாரிய தலைவர் பெர்டினாண்டோவும் தாம் தவறுதலாக இந்திய பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் பகிரங்கமாக கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இலங்கை மின்சார வாரிய தலைவர் பதவியில் இருந்து பெர்டினாண்டோ ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக இலங்கை மின்சார துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபையில் புதிய தலைவராக இளங்ககோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications