நெகிழ்ச்சி சம்பவம்.. கோத்தபய வீட்டு "லாக்கரை" திறந்த மக்கள்.. அள்ள அள்ள பணம்! அடுத்து நடந்த ட்விஸ்ட்
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை நேற்று கைப்பற்றிய போராட்டக்காரர்கள், அவரின் வீட்டில் இருந்து லட்ச லட்சமாக பணக்கட்டுகளை கைப்பற்றினர்.
Recommended Video
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அங்கு மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இடையில் சில நாட்கள் போராட்டம் நடக்காத நிலையில், அங்கு மீண்டும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
முக்கியமாக கொழும்பில் நீண்ட நாட்களாக போராட்டம் நடந்த கோட்ட காம கோ பகுதியை மீண்டும் போராட்டக்காரர்கள் நேற்று முதல்நாள் கைப்பற்றினார்கள்.

இலங்கை அதிபர் வீடு
அதோடு நேற்று இலங்கையில் அதிபர் அலுவலகம் மற்றும் வீட்டை போராட்டகாரர்கள் கைப்பற்றினார்கள். நேற்று பிற்பகலில் இலங்கை அதிபர் வீட்டிற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பல்லாயிரம் பேர் இலங்கை அதிபர் வீட்டை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்தனர். அதிபரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு இருந்த மெத்தையில் தூங்குவது, ஸ்விம்மிங் பூலில் ஆட்டம் போடுவது, அவர் வீட்டு பாத் ரூமில் குளிப்பது நேற்று போராட்டக்காரர்கள் கெட்ட ஆட்டம் போட்டனர்.

பணம்
இந்த போராட்டத்திற்கு இடையில் நேற்று கோத்தபய ராஜபக்சே வீட்டு லாக்கரை அங்கிருந்த பொதுமக்கள் திறந்தனர். அவரின் வீட்டு படுக்கை அறைக்குள் நுழைந்த பின் அதில் இருந்த பெரிய லாக்கரை போராட்டகாரர்கள் திறந்தனர். பெரிய பூட்டு போட்டு இருந்த லாக்கரை போராட்டக்காரர்கள் அங்கு இருந்த கம்பியை வைத்து உடைத்தனர். உள்ளே குவியல் குவியலாக பணம் இருந்துள்ளது. கட்டு காட்டாக படங்களில் காட்டப்படுவது போல பணம் அடுக்கப்பட்டு இருந்தது. முழுக்க இலங்கை ரூபா மற்றும் அமெரிக்க டாலர் உள்ளே இருந்துள்ளது.

கட்டு கட்டாக பணம்
இதை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதை உள்ளேயே வைத்து எண்ணி இருக்கிறார்கள். லைவ் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்து அப்படியே எண்ணி உள்ளனர். உள்ளே பல கட்டுகள் இருந்த நிலையில், அதை பொறுமையாக எண்ணி இருக்கிறார்கள். இதை அவர்கள் எடுத்து செல்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் அந்த பணத்தை எடுத்து செல்ல மறுத்துவிட்டனர்.

நெகிழ்ச்சி
மாறாக அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் போராட்டக்காரர்கள் பணத்தை கொடுத்தனர். பணக்கட்டுகளை அப்படியே போராட்டக்காரர்கள் போலீசாரிடம் கொடுத்தனர். போராட்டக்காரர்கள் அந்த பணத்தில் இருந்து ஒரு ரூபா கூட எடுக்காமல் அப்படியே போலீசாரிடம் திருப்பி கொடுத்தனர். போராட்டக்காரர்களின் இந்த செயல் போலீசாரை நெகிழ்ச்சி அடைய செய்தது.












Click it and Unblock the Notifications