கோத்தபாய ராஜபக்சேவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கின்றேன்: ஆல்-இன்-ஆல் ஜோதிடர் ஞானாக்கா அதிரடி
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் தாம் துண்டித்துக் கொள்வதாக பிரபல ஜோதிடர் ஞானாக்கா அதிரடியாக அறிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே அடித்து விரட்டப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் பலரது வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் பிரபல ஜோதிடர் ஞானாக்காவின் சொகுசு ஹோட்டல்கள், கார்களும் அடங்கும்.

மகிந்த, கோத்தபாய ராஜபக்சேக்களுக்கான ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்கா. இதனால் ராஜபக்சேக்கள் மீதான கோபம், ஞானாக்கா மீதும் திரும்பியது. இதனையடுத்து ஞானாக்காவின் பல லீலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகின. அதில் கோத்தபாய ராஜபக்சேவை நீராட்டிவிட்டவர் ஞானாக்கா என்பதும் ஒன்று. ஆனால் இதனை திட்டவட்டமாக ஞானாக்கா மறுத்திருந்தார்.
இந்த ஞானாக்காவுக்கு எதிராக எதிர்க்கட்சியின் ஹிருணிக்கா தலைமையில் போராட்டங்களும் நடந்தன. அப்போது ஞானாக்கா குறித்து ஹிருணிக்கா தெரிவித்த பல கருத்துகள் பெரும் சர்ச்சையாகின.
இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினருடனான அனைத்து உறவுகளையும் தாம் துண்டித்துக் கொள்கிறேன் என ஜோதிடர் ஞானாக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளார். அத்துடன் கோத்தபாய குடும்பத்துடன் 13 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பு இருந்து வந்தது; ஜனாதிபதியான பின்னர் ஒரு ஆண்டுகாலம் எம்மை சந்திக்க கோத்தபாய வரவில்லை. ஒரே ஒரு முறை சிகிச்சைக்காக வந்திருந்தார் எனவும் ஞானாக்கா கூறினார். என்னுடைய சொகுசு ஹோட்டல், வாகனங்களை எரித்தது அரசியல்வாதிகள்தான், என்னைப் பற்றி அவதூறான தகவல்களை இனியும் தொடர்ந்து பரப்ப வேண்டாம் என்றும் ஞானாக்கா கூறினார்.
1980களின் இறுதியில் மருத்துவமனை ஊழியராக இருந்த ஞானாக்கா, குறி சொல்வதில் வல்லவர். அவரது உண்மையான பெயர் இதுவரை யாருக்கும் தெரியாது. தாமே காளியின் அவதாரம் என கோவில் கட்டி கோலோச்சிக் கொண்டிருந்தார் ஞானாக்கா. அவரது காலடியில் இலங்கை அரசியல்வாதிகள் வீழ்ந்து கிடந்தனர். இலங்கையின் நிர்வாகத்தையே ஞானாக்கா சொல்படியே கோத்தபாய ராஜபக்சே நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications