மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்களாம்.. கொந்தளித்த கோத்தபாய ராஜபக்சே
பிரபாகரன் உயிருடன் இல்லவே இல்லை என அடித்து சொல்கிறார் இலங்கை மாஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே.
கொழும்பு: மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்கள் என இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் இருக்கிறார் என தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தார். 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் இதே கருத்தை நெடுமாறன் பல முறை கூறியிருந்தார்.

ஆனால் இம்முறை பிரபாகரன் குடும்பத்தினரின் அனுமதியுடன் உலகத் தமிழர்களுக்கு அறிவிக்கிறேன் என அழுத்தம் திருத்தமாக நெடுமாறன் கூறினார். மேலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், இந்தியாவின் நிலை உள்ளிட்டவை குறித்தும் நெடுமாறன் தமது அறிக்கையில் விவரித்திருந்தார்.
பழ.நெடுமாறனின் அறிக்கையும் அறிவிப்பும் பெரும் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது. பழ.நெடுமாறனின் அறிவிப்பு தொடர்பாக தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதால் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகள் ஒருமித்த குரலில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்றே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் 2009-ம் ஆண்டு பிரபாகரன் மரணம் அடைந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் இறுதி யுத்தத்தை முன்னெடுத்த இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும் பின்னாளில் ஜனாதிபதியானவருமான கோத்தபாய ராஜபக்சேவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோத்தபாய ராஜபக்சே கூறுகையில், மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்கள். பிரபாகரனின் உடலை கைப்பற்றி எரித்த 2009-ம் ஆண்டே அத்தனையும் முடிந்து போய்விட்டது. முடிவுக்கும் வந்துவிட்டது. பிரபாகரன், மனைவி, மகள், மகன்கள் அனைவருமே 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டனர். ஆகையால் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்கிற மனநோயாளிகளுக்கு நாம் பதிலளிபது வெட்கக் கேடானது என கூறியுள்ளார்.
இதேபோல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவும் பிரபாகரன் உயிரோடு இருப்பதை நிராகரித்துள்ளார். 2009-ம் ஆண்டு பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார். அப்போதே உறுதி செய்துவிட்டோம் என்றார். இதேபோல் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சிங்கள ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் பிரபாகரன் உயிருடன் இல்லை; உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications