கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் கொழும்பு அருகே பெரும் தீ விபத்து.. இரவில் நடந்த கொடூரம்.. 60 வீடுகள் எரிந்து நாசம்!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் கொழும்பு அருகே உள்ள கஜிமவட்டாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெரும் தீ விபத்தில் 60 வீடுகள் எரிந்து நாசம் ஆனது.

இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது

மொத்தம் 60 வீடுகள் மொத்தமாக எரிந்து சேதம் அடைந்து உள்ளன. இங்கே தீயை கட்டுப்படுத்த 12க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

Huge fire accident in Sri Lanka near Columbu: 60 houses burnt in minutes

இங்கே மொத்தம் 300 வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான வீடுகள் மரத்தால் கட்டுப்பட்ட வீடுகள் ஆகும்.

அதில் ஒரு வீட்டில் அடிக்கடி கும்பலாக இளைஞர்கள் சேர்ந்து போதை பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். அந்த வீட்டில் இருந்துதான் நேற்று இரவு தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

கஜிமவட்டாவில் உள்ள இந்த பகுதியில் நகரத்தில் வசிக்க முடியாத ஏழ்மையான மக்கள் வசித்து வந்துள்ளனர். 4 ஏக்கர் நிலத்தில் 300 வீடுகள் அருகருகே கட்டுப்பட்டு உள்ளன. பெரும்பாலும் தினக்கூலிகள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் இங்கே வசித்து வந்துள்ளனர். சிறிய சிறிய வீடுகளில் இவர்களில் ஒண்டி குடித்தனம் இருந்துள்ளனர்.

சில வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்துள்ளது. அப்படி ஒரு வீட்டில் இருந்துதான் தீ தொடங்கியதாக கூறப்படுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை.. சட்டவிரோதமாக அறிவித்த மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை.. சட்டவிரோதமாக அறிவித்த மத்திய அரசு

இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக மக்கள் சத்தம் போட்டதால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 10 பேர் வரை காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்து காரணமாக உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும்படி அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீ விபத்து காரணமாக பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Huge fire accident in Sri Lanka near Columbu: 60 houses burnt in minutes .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X