அஜித் தோவல் இலங்கை சென்ற இரு மாதங்களில்.. நாளை கொழும்பு செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கொழும்பு: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமையான நாளை, இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இருநாட்டு உறவுகள் மற்றும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினை பற்றி இலங்கை அரசு பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். அப்போது அடுத்த நாளே இலங்கைக்கு ஜெய்சங்கர் விஜயம் செய்தார். மைத்ரிபால சிறிசேனா அதிபராக இருந்தபோது இந்தியா அவருடன் நெருங்கிய உறவை பேணியது. புதிய அரசுடனான உறவையும் பேண வேண்டும் என்பதற்காகத்தான் ஜெய்சங்கர் உடனடியாக இலங்கை விஜயம் செய்ததாக கூறப்பட்டது.

தற்போது மீண்டும் ஜெய்சங்கர் இலங்கை பயணம் செய்ய உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே கோத்தபயா ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் உடன், ஜெய்சங்கர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த 10 வருடங்களாக, இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த துவங்கியது முதல், இந்தியா-இலங்கை இடையேயான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. இதை சரிப்படுத்தி இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் ஜெய்சங்கரின் இந்த விஜயம் இருக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு சென்று கடல்சார் கூட்டுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை மற்றும் மாலே ஆகிய நாடுகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இந்த விஜயம் நடைபெற்ற இரண்டு மாதங்களில் மற்றொரு முக்கியமான இந்திய பிரதிநிதி இலங்கை செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த 36 மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி சென்று மீன் பிடித்ததாக கூறி அந்த நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விவகாரம் தொடர்பாக இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்படும். மீனவர்கள் விடுதலை தொடர்பாக ஜெய்சங்கர் முயற்சிகளை முன்னெடுப்பார் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications