இலங்கை ஜனாதிபதி தேர்தல்: நாமல் ராஜபக்சேவுக்கு குடும்பத்திலேயே கடும் எதிர்ப்பு- ரணிலுக்கு ஆதரவாம்!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சேவுக்கு அவரது குடும்பத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாம். இதனால் "ராஜபக்சே" குடும்பமே இரண்டாக பிளவுபட்டிருக்கிறதாம். மகிந்த ராஜபக்சே மீது கோபத்தில் உள்ள சிலர் இலங்கையைவிட்டே வெளியேற முடிவு செய்துள்ளனராம். நாமல் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வாக்களிக்கவும் சிலர் முடிவு செய்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இடதுசாரி அனுர குமார திசநாயக்கே, மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 7 தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் ஈழத் தமிழர் கட்சிகள், மலையகத் தமிழர் கட்சிகளின் முழுமையான ஆதரவு அரியநேந்திரனுக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நாமல் ராஜபக்சேவை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவித்ததற்கு மகிந்த ராஜபக்சே குடும்பத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். ராஜபக்சே குடும்பத்தில் சீனியர்கள் பலரும் தங்களை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார்கள் என காத்திருந்தனர். ஆனால் இந்த இலவு காத்த கிளிகளுக்கு 'இழவு' செய்தியாகவே நாமல் ராஜபக்சே போட்டியிடுவார் என்கிற அறிவிப்பு இருந்ததாம். இதனால் கொந்தளித்து போயிருக்கும் சிலர் இலங்கையை விட்டு வெளியேறிவிடலாம் என முடிவு செய்துள்ளனராம்.
மேலும் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த மாஜி சபாநாயகர் சமல் ராஜபக்சே, மாஜி அமைச்சர் சசீந்திர ராஜபக்சே உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதுதான் சரி என வாதிடுகின்றனராம்.
மேலும் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு ரணில் விக்கிரமசிங்கே தரப்பில், தேர்தல் பிரசார ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளதாம். இப்படி மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்சே குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிளவு அடுத்த சில நாட்களில் பகிரங்கமாக வெடிக்கக் கூடும் எனவும் இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications