நியூஸ் படிங்க, போராட்ட இடங்களுக்கு போகாதீங்க! இலங்கையிலுள்ள நியூசிலாந்து மக்களுக்கு தூதரகம் வார்னிங்
கொழும்பு : இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.
ஏராளமான ஈழத் தமிழர்கள், வாழ வழியின்றி கடல் கடந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வரத் தொடங்கி உள்ளனர். அதே நேரம் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களும் வன்முறைகளும் வெடிக்கத் தொடங்கி இருக்கின்றன.
நேற்று முன் தினம் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே பதவி விலகக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
இதனை தொடர்ந்து நேற்றிரவு இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் கொழும்புவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இலங்கையில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக அந்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய வெளிநாட்டினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

நியூசிலாந்து தூதரகம் கடிதம்
இந்த நிலையில், இலங்கைக்கான நியூசிலாந்து தூதரகம், இலங்கையில் தங்கி இருக்கும் தங்கள் நாட்டு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. இதுகுறித்து இலங்கைக்கான நியூசிலாந்து தூதர் மைக்கேல் அப்லெடான் எழுதியுள்ள கடிதத்தில், "இலங்கையில் பொருளாதார சூழல் மோசமடைந்துகொண்டே செல்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைக்கவில்லை.

தொடரும் போராட்டங்கள்
மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இது இன்னும் சில காலம் நீடிக்கும். அண்மை காலங்களாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொழும்புவில் நடைபெற்ற போராட்டம் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கை பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை முதல் கொழும்பு மற்றும் இதர இடங்களில் போராட்டங்கள் வெடிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அமைதியான போராட்டங்களிலும் வன்முறை வெடிக்கலாம்
இலங்கையில் உள்ள நியூசிலாந்து மக்கள் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். சில சமயங்களில் அமைதியான போராட்டங்களில் கூட வன்முறை வெடிக்கலாம். இலங்கையின் சூழல், ஊரடங்கு, அரசு உத்தரவுகள், வெளிநாட்டினருக்கான அறிவுறுத்தல்களை அறிய நியூசிலாந்து மக்கள் உள்ளூர் ஊடகங்களை தொடர்ந்து பாருங்கள்.
Recommended Video

அவசர உதவி எண் அறிவிப்பு
இலங்கையில் உள்ள நியூசிலாந்து மக்கள், http://safetravel.govt.nz என்ற இணையதளத்தில் உங்களை பதிவு செய்துகொள்ளுங்கள். ஏதேனும் உதவியோ ஆலோசனையோ தேவைப்பட்டால் +94112174717 என்ற எண் அல்லது [email protected] இ மெயில் முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள். அவசர உதவி தேவைப்பட்டால் நியூசிலாந்து தூதரக உதவி எண்ணான +6499202020-க்கு அழையுங்கள்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.
-
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460.. அடுத்து இந்தியாதான்! எல்லாம் டிரம்பால் வந்த வினை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications