ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 1.50 லட்சம்.. பிரட் பாக்கெட் ரூ 200.. இலங்கை மக்கள் கடும் அவதி
கொழும்பு: இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு பிறகு உலகில் பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. இது இலங்கையில் பெரும் நெருக்கடி கொடுத்துள்ளது. நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயர்வால் இலங்கை மக்கள் அவதியில் உள்ளார்கள்.
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஒரேடியாக ரூ 77 அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ 55 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் பேருந்து கட்டணம் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.

வறுமை
இதனால் பெரும்பாலான மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அமெரிக்கா டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 260 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுடனான போருக்கு பின்னர் இலங்கையின் பொருளாதாரம் நசிந்து போய்விட்டது.

கொரோனா ஊரடங்கு
பொதுவாக இலங்கை சுற்றுலா தளம் என்பதால் அங்கு முக்கிய வருமானமே சுற்றுலா பயணிகள் மூலமே கிடைக்கிறது. ஆனால் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துவிட்டதால் நாளுக்கு நாள் மோசமான பொருளாதார நிலையை இலங்கை சந்தித்து வருகிறது.

7 மணி நேர மின்வெட்டு
நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 7 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. சமையல் கேஸ், மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் ஏராளமான பேக்கரிகள், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு பாக்கெட் பிரட்டின் விலை ரூ 150 முதல் ரூ 200 வரை உயர்ந்துள்ளது. கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூ 35 உயர்ந்துள்ளது.

சர்க்கரை விலை ரூ 215
ஒரு கிலோ பருப்பின் விலை ரூ 250 , சர்க்கரையின் விலை ரூ 215, உருளைக்கிழங்கின் விலை ரூ 300, பெரிய வெங்காயத்தின் விலை ரூ 400, உளுந்து கிலோ ரூ 2000 வரை உயர்ந்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கத்தின் விலை
அதன்படி ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ 1.50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 1.39 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.
-
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications