14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்- பிரபாகரன் குடும்பமே இறந்துவிட்டது- மாஜி இலங்கை தளபதி சரத் பொன்சேகா
பிரபாகரனும் அவரது குடும்பமும் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டனர் என்கிறார் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா.
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் பொய் சொல்லி வருகிறார் என இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா கூறியுள்ளார்.
2009-ம் ஆண்டு இலங்கை இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்படவில்லை; அவர் உயிருடனும் நலமுடனும் இருக்கிறார்; இதனை பிரபாகரன் அனுமதியுடன் உலகத் தமிழர்களுக்கு அறிவிக்கிறேன் என்று நேற்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருந்தார்.

மேலும் , தமிழீழ விடுதலைக்கான திட்டத்தையும் பிரபாகரன் அறிவிப்பார் என்பதுடன் ஒரு பக்க அறிக்கை ஒன்றையும் நெடுமாறன் வெளியிட்டார். அந்த அறிக்கையில், சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார் எனவும் நெடுமாறன் கூறியிருந்தார்.
பிரபாகரன் குறித்த நெடுமாறனின் இந்த கருத்தை இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சே; பாதுகாப்புத்துறை செயலாளராக கோத்தபாய ராஜபக்சே; ராணுவ தளபதியாக சரத் பொன்சேகா இருந்தனர்.
பிரபாகரன் மரணமடையவில்லை; உயிருடனும் நலமுடனும் இருக்கிறார் என்ற பழ.நெடுமாறன் அறிவிப்பு குறித்து தற்போது சரத் பொன்சேகா கூறியிருப்பதாவது: 2009-ம் ஆண்டு யுத்தத்தின் போது பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகன்கள் சார்லஸ் ஆண்டனி, பாலச்சந்திரன், மகள் துவாரகா ஆகிய அனைவருமே கொல்லப்பட்டுவிட்டனர். பிரபாகரனின் குடும்பத்தில் யாரும் தப்பிச் செல்லவில்லை. தாம் நடத்திய போராட்டத்தில் ஒட்டு9மொத்த குடும்பத்தையே அர்ப்பணித்தவராகவே பிரபாகரன் திகழ்கிறார்.
கடந்த 14 ஆண்டுகளாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என தமிழ்நாட்டு அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் கூறி வருகிறார். பழ.நெடுமாறன் தொடர்ந்து இந்த பொய்யை கூறி வருகிறார். இப்படியான பொய்யான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் சில அரசியல் தலைவர்களுக்கு பிரபாகரன் பெயரை உச்சரிக்க முடியாவிட்டால் பிழைப்பே இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது. இலங்கை அரசியல் தலைவர்களும் இதேபோல்தான் பிரபாகரனை முன்வைத்து பிழைப்பு நடதிதுகின்றனர். இவ்வாறு பொன்சேகா கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications