கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐ.நா. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எங்களை ஆதரித்த இந்தியாவுக்கு நன்றி... உண்மையை போட்டுடைத்த இலங்கை!

Google Oneindia Tamil News

கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் தங்கள் நாட்டுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணித்ததன் மூலம் எங்களை ஆதரித்த இந்தியாவுக்கு நன்றி என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் மேற்கொண்டது இல்லை.

Sri Lanka appreciates support shown at Geneva by India, says Dinesh Gunawardena

இம்முறை இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்துக்கு 22 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தும் 14 நாடுகள் தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமலும் இருந்தன. வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே இலங்கை அரசு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தமது ட்விட்டர் பக்கத்தில், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எங்களை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்டது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

English summary
Srilanka Foreign Minister Dinesh Gunawardena tweets that "Sri Lanka appreciates support shown at Geneva by India".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X