செம்ம ட்விஸ்ட்- பதவியை தக்க வைக்க மகிந்த ராஜபக்சேவை டிஸ்மிஸ் செய்ய போகும் கோத்தபாய ராஜபக்சே?
கொழும்பு: இலங்கையில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக பல வாரங்களாக நடத்தி வரும் தொடர் போராட்டங்களின் உச்சமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே டிஸ்மிஸ் செய்வது என ஜனாதிபதியும் மகிந்தவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சே முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை அடைந்ததால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக மிக கடுமையாக உயர்ந்தது. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த இலங்கையுமே போர்க்களமாகிப் போனது. இலங்கையில் பெரும்பாலான இடங்கள் போராட்ட களங்களாக மாறிப் போகின.

இலங்கை கிளர்ச்சி
இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் 21 நாட்களாக தொடர் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். கொழும்புவில் கோத்தபாய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவின் மாளிகைகள் தொடர் முற்றுகைப் போராட்டங்களுக்குள்ளாகி இருக்கின்றன. இலங்கையின் மலையகத் தமிழர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் என அனைத்து தரப்புமே இப்போராட்டத்தில் இணைந்துள்ளன.

இடைக்கால அரசாங்கம்
இந்த நிலையில் போராட்ட பதற்றங்களைத் தணிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் மகிந்த ராஜபக்சவோ, இடைக்கால அரசாங்கத்தை அமைத்தாலும் தாமே பிரதமர்; என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கூட பிரதமர் பதவியை விட்டுப் போக முடியாது என்கிறார். இருந்தாலும் மகிந்த ராஜபக்ச கவுரவமாக பதவியை விட்டுப் போய்விடுவதுதான் மரியாதை என பவுத்த பிக்குகள் மிரட்டி வருகின்றனர்.

மகிந்தவுக்கு ஆப்பு
இந்நிலையில் இலங்கையில் புதிய திருப்பமாக, மகிந்த ராஜபக்சேவை மட்டும் ஓரம் கட்டுகிற முயற்சிகள் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தனைக்கும் இந்த புதிய முயற்சிகளை முன்னெடுப்பதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேதான். தமது பதவியை தக்க வைப்பதற்காக ராஜபக்சேவை நீக்கிவிட்டு புதிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பல்வேறு தரப்புடன் கோத்தபாய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில்தான் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்வது என கோத்தபாய முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

உச்சகட்ட குழப்பம்
கோத்தபாயவின் இந்த முடிவுக்கு எதிராக மகிந்தவும் அவரது இதர சகோதரர்களும் என்ன எதிர்வினையாற்றுவார்கள்? என்பது பெரும் பார்ப்பாக உள்ளது. இதனால் இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் தொடருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications