கதிர்வீச்சு பொருட்களுடன் அனுமதியின்றி நுழைந்த சீனா கப்பல்- வெலவெலத்து போன இலங்கை
கொழும்பு: கதிர்வீச்சுப் பொருட்களுடன் அம்பந்தோட்டா துறைமுகத்துக்குள் நுழைந்த சீனாவின் சரக்கு கப்பலை இலங்கை அனுமதிக்க மறுத்தது. இதனையடுத்து கடலிலேயே அந்த சீனா கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
இலங்கையின் சீனாவின் கை தொடர்ந்து ஓங்கி வருகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் சீனா உருவாக்கி வரும் துறைமுக நகரத்துக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட உள்ளது.

சீனாவுக்கு கூடுதல் அதிகாரம்
இது இலங்கையில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்கள் அரசியல் சாசனப்படியான அதிகாரத்துக்காக போராடி வருகின்றனர். ஆனால் இந்த அதிகாரப் பரவல் கோரிக்கையை நிராகரிக்கும் இலங்கை, சீனாவுக்கு சொந்த நாட்டுக்குள் சிறப்பு அதிகாரங்களை வழங்குவதா? என்பது தமிழர் தரப்பின் கோரிக்கை.

இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து
ஏற்கனவே மன்னார் வளைகுடா கடற்பரப்பில் பிரம்மாண்ட காற்றாலைகளை அமைக்க சீனாவுக்கு அனுமதி கொடுத்துள்ளது இலங்கை. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அம்பந்தோட்டா துறைமுகம்- சீனா கப்பல்
இந்த நிலையில் சீனாவின் சரக்கு கப்பல் ஒன்று அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வந்தது. ஆனால் அந்த சரக்கு கப்பலில் அணு ஆயுத தயாரிப்புக்கான கதிரியக்கத்தை வெளியிடக் கூடிய மூலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அதிர்ந்து போன இலங்கை துறைமுக அதிகாரிகள், அந்த கப்பலுக்கு அனுமதி தர மறுத்துவிட்டனர்.

நடுக்கடலில் சீனா கப்பல்
தற்போது அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வெளியே கடலிலேயே சீனாவின் சரக்கு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலை தொடர்ந்து இயக்குவதில் தொழில்நுட்ப பிரச்சனைகள் இருப்பதாலேயே இலங்கை அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வந்ததாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தளங்கள்
இலங்கையில் சீனா உருவாக்கி வரும் கொழும்பு துறைமுக நகர், விரிவாக்கம் செய்யும் அம்பந்தோட்டா துறைமுகம் ஆகியவற்றை இந்தியாவுக்கு எதிரான தளமாக சீனா பயன்படுத்த வாய்ப்பு உள்ளது; இதனால் இந்திய பெருங்கடலில் இந்தியாவுக்கு சவால்கள் காத்திருக்கின்றன என்பது அரசியல் பார்வையாளர்களின் எச்சரிக்கை. இந்த நிலையில் கதிர்வீச்சுப் பொருட்களுடன் சீனாவின் கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்துக்குள் நுழைந்தது மிக முக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
-
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில்












Click it and Unblock the Notifications