கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எஸ்கேப் ஆன மகிந்த! அதிபர் இருக்கையில் கம் போட்டு ஒட்டிக்கொண்ட கோத்தபய! பதவி விலகினால் என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை தொடர்ந்து இலங்கையில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அங்கு அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு ஆளுநர் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் அதிபர், பிரதமர் இருவரையும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர்.

கடாஃபி போல அடிச்சே கொல்லுவாங்களோ?அலரி மாளிகையில் விடிய விடிய மரணபீதியில் அலறி கிடந்த மகிந்த ராஜபக்சேகடாஃபி போல அடிச்சே கொல்லுவாங்களோ?அலரி மாளிகையில் விடிய விடிய மரணபீதியில் அலறி கிடந்த மகிந்த ராஜபக்சே

போராட்டம்

போராட்டம்

போராட்டத்திற்கு இடையில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். இத்தனை நாட்கள் அமைதியாக நடந்த போரட்டத்தில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்கள் கலவரம் செய்தனர். பிரதமர் ராஜினாமா செய்த நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து நடந்த மிகப்பெரிய மோதலில், இலங்கையில் தென்பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள் தொடர்ந்து சிங்களரால் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.

 அதிபர் பதவி விலகுவாரா?

அதிபர் பதவி விலகுவாரா?

இந்த நிலையில்தான் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் அதிபர் - பிரதமர் என்ற நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. இப்போது புதிய பிரதமர் பதவி ஏற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. அங்கு அதிபரும் பதவி விலக வேண்டும் என்று சிறிசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதிபரும், பிரதமரும் வேறு வேறு கட்சியை சேர்ந்தவராக இருந்தால், பிரதமராக சுதந்திரமாக செயல்பட முடியாது. சட்டம் இயற்ற முடியாது என்பதால் இந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. அதிபரும் அங்கே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை

இலங்கை

இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி அங்கு அதிபருக்குத்தான் அதிக சக்தி இருக்கிறது. பிரதமர் என்பவர் அதிபரின் துணை என்ற அளவிலேயே அங்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதிபர் நினைத்தால் பிரதமர் பதவி ஏற்ற 2 வருடம் 6 மாதம் கழித்து அவரை பதவி நீக்கம் செய்ய முடியும், பாராளுமன்றத்தை கலைக்க முடியும். பிரதமர் என்பவர் சட்டம் இயற்றும் தலைவர் மட்டுமே.. ஆனால் அதிபர் நினைத்தால் அந்த சட்டத்தையும் நீக்க முடியும்.

நீக்கம்

நீக்கம்

இப்போது பிரதமர் பதவி விலகிவிட்டதால் அந்த பதவியில் பிரச்சனை இல்லை. ஆனால் அதிபர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைப்பதால் அது தொடர்பான பிரச்சனை மட்டுமே நிலவி வருகிறது. இப்போது எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவியை ஏற்க மறுத்து வருகின்றன. அங்கு அதிபரை நீக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கலாம். ஆனால் அவையில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் சேர்ந்து அதிபரை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கோரிக்கை என்ன?

கோரிக்கை என்ன?

ஆனால் இது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அங்கு அதிபரை நீக்க வேண்டும் என்றால் அதற்கு கோர்ட் அனுமதிக்க வேண்டும். 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால் அதிபர் நினைத்தால் நீதிபதிகளை நீக்க முடியும் என்பதால் அதிபரை நீக்குவது அங்கு கடினம். அதாவது இடியாப்ப சிக்கல் போன்றது. அதே சமயம் அதிபர் தானாக பதவி விலகினால் பொதுத்தேர்தல் நடக்கும். ஆனால் கோத்தபய பலமுறை பதவி விலக மாட்டேன் என்று கூறி உள்ளார்.

Recommended Video

    Mahinda Rajapaksa-வுக்கு மரண அடி | Su-30 MKI Fighter இந்தியா எடுத்த அதிரடி முடிவு | Oneindia Tamil
    காசு இல்லை

    காசு இல்லை

    அவர் பதவி விலகினால் மட்டுமே அங்கு அதிபர் தேர்தல் நடக்கும். புதிதாக பொதுத்தேர்தல் நடக்கும். ஆனால் புதிதாக தேர்தல் நடத்த காசு இல்லை. இதனால் அதிபரை நீக்குவதிலும் நிதி சிக்கல், சட்ட சிக்கல், நீதிமன்ற மோதல் உள்ளது. இப்படி பல பிரச்சனைகள் இருப்பதால்.. அங்கு மொத்தமாக அதிபர் பதவியையே நீக்க வேண்டும் என்று அங்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதை மொத்தமாக நீக்கிவிட்டு 1978க்கு முன் இருந்தது போல அதிபர் இல்லாத அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இதுவும் நடக்குமா என்பது சந்தேகம்தான்!

    English summary
    Sri Lankan Economic Crisis: What will happen to president Gottapaya as PM Mahinda resigned? இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X