இலங்கை அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பு! எதிர்க் கட்சிகளுக்கு மிகவும் உருக்கமான கோரிக்கை வைத்த ராஜபக்ச
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நிதி நெருக்கடி மிக மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்தார்.
இலங்கை நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருந்தாலும் கூட, இலங்கை நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் மேம்படவில்லை. அந்நாட்டின் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை
இலங்கை நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக பெரும்பாலும் சுற்றுலாத் துறையையே நம்பி இருக்கும் நாடு இலங்கை. கொரோனா பெருந்தொற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறையாகச் சுற்றுலாத் துறை இருக்கும் நிலையில், இன்னும் கூட சுற்றுலாத் துறை முழுமையாக மேம்படவில்லை. இத்துடன் இயற்கை விவசாயம் காரணமாக வேளாண் துறையில் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதால் இலங்கை பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது.

அதிபருடன் சந்திப்பு
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதனால் இலங்கையில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இலங்கையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தச் சூழலில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சந்தித்தார். அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களுடன் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார்.

ராஜினாமா ஏற்பு
அப்போது அதிபர் கோத்தபய ராஜபக்ச 26 அமைச்சர்களின் ராஜினாமாவையும் ஏற்றுக் கொண்டார். தற்போது இலங்கையில் மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போராட்டத்தைத் தடுக்க அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அது பெரியளவில் பலன் தருவதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச உருக்கமான கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

உருக்கமான கோரிக்கை
இலங்கை பொருளாதார நிதி நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கொண்ட ஒரு அரசை அமைக்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை அதிபரின் இந்தக் கோரிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். முன்னதாக பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
Recommended Video

பொருளாதர நிதி நெருக்கடி
பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்கா டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 250 இலங்கை ரூபாயாகச் சரிந்துள்ளது. அதேபோல இலங்கை ஜிடிபி மதிப்பும் இப்போது மைனஸ் 16.3 சதவீதமாகச் சரிந்துள்ளது. அதேபோல இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பும் மிகக் கடுமையாகச் சரிந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் மின்சார தட்டுப்பாடு கூட ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications