Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு இயற்கை விவசாயம் காரணமா? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை நாட்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு இயற்கை விவசாயம் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

அண்டை நாடான இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட உச்சம் தொட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து நாட்டுப் பொருளாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை பொருளாதாரம் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை

இலங்கை

அமெரிக்கா டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 250 இலங்கை ரூபாயாகச் சரிந்துள்ளது. அதேபோல இலங்கை ஜிடிபி மதிப்பும் இப்போது மைனஸ் 16.3 சதவீதமாகச் சரிந்துள்ளது. அதேபோல இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பும் மிகக் கடுமையாகச் சரிந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் மின்சார தட்டுப்பாடு கூட ஏற்பட்டுள்ளது.

 நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

இந்த மோசமான நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை உதவி கோரியுள்ளது. இலங்கை நாட்டிற்கு இந்தியா ஏற்கனவே 1 பில்லியன் டாலர் கடனுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் வகையில் இந்தியா அனுப்பிய இருந்த 40,000 டன் டீசல் நேற்றைய தினம் இலங்கையை அடைந்துள்ளது.

 அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

மேலும், அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கொந்தளிப்பில் உள்ள இலங்கை மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இதைச் சமாளிக்க இலங்கை நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், போராட்டங்கள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை,

 இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

இந்நிலையில், இலங்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிக்கு இயற்கை விவசாயமும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இலங்கையில் கெமிக்கல் உரங்களைப் பயன்படுத்த அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முழுமையாக தடை விதித்தார். 100 சதவீத இயற்கை விவசாயத்தைப் பின்பற்றும் முதல் நாடாக இலங்கையை மாற்றுவதே அவரது லட்சியமாக இருந்தது. இதன் காரணமாக விவசாய உற்பத்தி கடுமையாகச் சரிந்த நிலையில், இலங்கையில் இப்போது மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 2019 தேர்தல்

2019 தேர்தல்

கடந்த 2019 தேர்தல் சமயத்திலேயே முழு இயற்கை விவசாயம் என்ற முழக்கத்தை கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தல் பிரசாரத்தில் முன்வைத்திருந்தார். அடுத்த 10 ஆண்டுகளில் கெமிக்கல் உரங்களின் பயன்பாட்டை படிப்படியாக அகற்றப் போவதாக அவர் அறிவித்திருந்தார். அவர் தேர்தலில் வென்று அதிபர் பதவியில் வென்ற சில மாதங்களில் நாட்டில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. இதனால் உலகின் பல நாடுகளைப் போலவே இலங்கையும் தடுமாறியது. குறிப்பாக, இலங்கை சுற்றுலாத் துறையை அதிகம் நம்பி இருக்கும் மாநிலம் என்பதால் பொருளாதார பாதிப்பு சற்று மோசமாகவே இருந்தது.

 மோசமான விளைவு

மோசமான விளைவு

இருப்பினும் கோட்டாபய ராஜபக்ச தனது திட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. கடந்த 2021 ஏப்ரல் 26ஆம் தேதி நாட்டில் அனைத்து விதமான கெமிக்கல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்யவும் பயன்படுத்தவும் முழுமையான தடை தடை விதிக்கப்பட்டது. சுமார் 20 லட்சம் விவசாயிகளைக் கொண்ட இலங்கையில் இது மாபெரும் புரட்சியாக இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், இருப்பினும் அது மோசமான விளைவே ஏற்படுத்தியது. இந்த ஒட்டுமொத்த தடை காரணமாக இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 நெல் விளைச்சல்

நெல் விளைச்சல்

இலங்கையில் மிக அதிகம் உற்பத்தி செய்யப்படும் நெல் விளைச்சல் கூட இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கெமிக்கல் உரங்கள் தடை செய்யப்பட்ட முதல் 6 மாதங்களில், நாட்டில் நெல் உற்பத்தி சுமார் 20 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 450 மில்லியன் டாலர் நெல்லை இலங்கை இறக்குமதி செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது. இதனால் அரிசி விலையும் சுமார் 50 சதவிகிதம் வரை உயர்ந்தன. இதனால் ​​நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடாக அந்நாட்டு அரசு 40,000 மில்லியன் இலங்கை ரூபாய் ($200 மில்லியன்) அறிவித்துள்ளது. இது தவிர அரிசி விவசாயிகளுக்கு மானியமாக 149 மில்லியன் டாலரை அளிக்க உள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

 பொருளாதார இழப்பு

பொருளாதார இழப்பு

இருப்பினும், கெமிக்கல் உரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் மோமான இழப்பையும் பெரும் கடனையும் சந்தித்துள்ளதால் இலங்கை அரசு அளிக்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை என்று அந்நாட்டு விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இலங்கை அந்நிய செலாவணியின் முக்கிய காரணமாகக் கருதப்படும் தேயிலை துறையில் மட்டும் இதனால் $425 மில்லியன் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

 அந்நியச் செலாவணி

அந்நியச் செலாவணி

கெமிக்கல் உரங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட உடனேயே தேயிலை உற்பத்தி கடுமையாகச் சரிந்தது. இதனால் கடந்த 2021 நவம்பரில் கெமிக்கல் உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு சற்று தளர்த்தியது. தேயிலை, தேங்காய் மற்றும் ரப்பர் உற்பத்தியில் சில தளர்வுகளை அறிவித்தது. இருப்பினும், நிலைமை தொடர்ந்து மோசமடைந்ததால் இப்போது, ​​தடையை முற்றிலுமாக நீக்கியுள்ளது, இருப்பினும், தடை சமயத்தில் அந்நியச் செலாவணி கடுமையாகச் சரிந்ததால், இப்போது உரங்களை இறக்குமதி செய்யக் கூட நிதி இல்லாத நிலையில் இலங்கை உள்ளதாகக் கூறப்படுகிறது.

 முறையான திட்டம்

முறையான திட்டம்

எந்தவொரு முறையான திட்டமும் இல்லாமல் கெமிக்கல் உரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த கெமிக்கல் உர தடையால் சுமார் 5 லட்சம் இலங்கை மக்கள் மீண்டும் வறுமைக் கோட்டில் தள்ளப்பட்டுள்ளனர். இயற்கை விவசாயம் என்பது மிகச் சிறந்த முறை என்றாலும் கூட அதற்குக் குறிப்பிட்ட கால இடைவெளியும் முறையான திட்டமிடலும் தேவை. அப்படி இல்லையென்றால் இலங்கையின் நிலை யாருக்கு வேண்டுமென்றால் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+