ராஜபக்சே திருடர்கள்- நாளையே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய சஜித் பிரேமதாச வலியுறுத்தல்
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் நாளையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று சஜித் பிரேமதாச பேசியதாவது: இங்கே வந்து யாரும் பொய் வாக்குறுதிகள் தர வேண்டாம், நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணமானவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும், பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும், இரண்டு நம்பிக்கை இல்லா தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளோம். 225 எம்.பிக்களில் யார் யார் இந்த நாட்டு மக்கள் மக்கள் பக்கம் இருக்கிறார்கள்? யார் யார் ஆட்சியில் இருக்கும் திருடர்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று இந்த நாட்டு மக்களுக்கு பார்த்துக் கொள்ள முடியும்.

இது பிராந்திய பொருளாதார நெருக்கடி அல்ல. இது இலங்கைக்கான நெருக்கடி. 30 மாதங்களாக உங்கள் அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடி இது. தற்போது தீர்வு தேவை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 30 மாதங்களாக செயல்பாட்டில் இருந்த கிணற்றுத் தவளைக் கருத்தைத் தவிர்த்து, இப்போது உலகத்துடன் பேசத் தயாராகிவிட்டீர்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்திய பிரதமர் மோடி வரவிருக்கும் போது கருப்புக் கொடி ஏற்றினீர்கள். இந்தியாவிலிருந்து கொஞ்சம் பணத்தை பெற்று, சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று சில முயற்சிகளை மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும். மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதை நான் ஒப்புக் கொள்கிறேன். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றினோம். இது ஒரு பொறுப்பான கட்சி. சில விஷயங்களைச் செய்ய வேண்டாம் என்று எமக்கு கூறினீர்கள். IMF க்கு செல்வதால் ஸ்திரத்தன்மையின் சிக்கலை ஏற்படுத்தும் என்று . நாங்கள் அதைக் கேட்டோம். இந்த அதிகார பேராசையால் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ ஆக வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பதவிகளுக்குள் எங்களை மட்டுப்படுத்தாதீர்கள். நாட்டிற்கு சரியானதைச் செய்தால் நாங்கள் அதற்கு ஆதரவாக இருப்போம். நாங்கள் எப்போதும் தூதர்களை சந்திப்போம். இந்தியா உங்களுக்கு உதவும் முன், உதவ வேண்டுமா வேண்டாமா என்று என்னிடம் கேட்டார்கள். உண்மைக்கதை. இது நல்லதா கெட்டதா என்று. பொய் என்றால் அமைச்சரிடமே கேளுங்கள். மக்களுக்கு வழங்கக்கூடிய முழு ஆதரவையும் பெற்றுக் கொடுக்குமாறு நாங்கள் கூறினோம். இவ்வாறு சஜித் பிரேமதாச கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications