கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்- நாளை நள்ளிரவுக்கு முன் இறுதி முடிவுகள்: தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் நாளை நள்ளிரவுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 9-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் 196 எம்.பிக்கள் தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படுகின்றனர்.

Srilanka Parliament Election Results will be declare tomorrow: Mahinda Deshapriya

7452 வேட்பாளர்கள் போட்டியிடும் இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும். வாக்குப் பதிவு முடிவடைந்த உடன் அனைத்து வாக்குப் பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதன்பின்னர் நாளை காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய கூறுகையில், நாளை நள்ளிரவுக்கு முன் இறுதி முடிவுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறி உள்ளார்.

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

இலங்கையில் மொத்தம் 66 இடங்களில் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு மையங்கள், வாக்கு எண்ணும் இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

English summary
Srilanka Election Commission Chairman Mahinda Deshapriya said that Parliament Election Results will be declare tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X