அடேங்கப்பா இத்தனை லட்சம் பேரா... ராஜபக்சே குடும்பத்தை தெறிக்கவிட்ட சஜித் பிரேமதாச!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து ஆதரவாளர்கள் பல லட்சம் பேர் காலிமுகத் திடலில் ஒன்று திரண்டதால் கொழும்பு நகரமே ஸ்தம்பித்துப் போனது. இது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய தரப்புக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக சஜித் பிரேமதாசவும் கோத்தபாய ராஜபக்சேவும் மோதுகின்றனர்.

 Srilanka Presidential Elections: Sajith Premadasa’s inaugural rally in Colombo

கோத்தபாய ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனாவின் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு காலிமுகத் திடலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டனர். இலங்கை வரலாற்றிலேயே இதுபோல் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் மக்கள் கூட்டம் கூடியதில்லை என்கிறார் தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவரான அமைச்சர் மனோ கணேசன். மேலும் கொலைகார ராஜபக்சே கும்பலுக்கு மக்கள் தரப்போகும் பதிலடிதான் இது என்கிறார் அமைச்சர் மங்கள சமரவீர.

இத்தேர்தலில் தமிழர்கள் ஆதரவு யாருக்கு என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அறிவிக்கவில்லை. சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்சே ஆகிய இருதரப்பிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+