தோல்வி எதிரொலி.. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா.. பரபரப்பு திருப்பம்!
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
Recommended Video
கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து அவர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றுள்ளார். கடந்த திங்கள் கிழமை இவர் அதிபராக பதவியேற்றார். இதனால் ராஜபக்சே குடும்பம் மீண்டும் அதிகார வட்டத்திற்குள் வந்துள்ளது.
கோத்தபய ராஜபக்சே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ராஜபக்சேவின் குடும்பம் கட்சியாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வி
இந்த அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் கூட்டணிதான் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த தேர்தல் ரணில் vs ராஜபக்சே என்று பார்க்கப்பட்டது.

விலகல்
இந்த நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. முன்னாள் அதிபர் ராஜபக்சே இது தொடர்பாக தினமும் கோரிக்கைகளை வைத்து வருகிறார். அதேபோல் ரணில் விக்கிரமசிங்கே கட்சியை சேர்ந்தவர்களும் இதே கோரிக்கையை வைத்து வந்தனர்.

கடிதம்
இதையடுத்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்தார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து அவர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரின் பதவி விலகலை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டார். மேலும்எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவும் ஐதேக கூட்டணியில் ரணில் வலியுறுத்தி உள்ளார்.

என்ன முடிவு
இதையடுத்து இலங்கையில் அமைச்சரவை மொத்தமாக கலைக்கப்படும். அதன்பின் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்தல் நடக்கும். ஆனால் அதுவரை இடைக்கால அரசு பதவி ஏற்கும் என்று தகவல்கள் வருகிறது. பெரும்பாலும்புதிய அரசை அமைக்க மகிந்த ராஜபக்சேவை கோத்தபாய ராஜபக்சே அழைக்க கூடும் என தகவல் வெளியாகி வருகிறது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications