இலங்கையை மிரட்டும் டெல்டா...இந்தியாவை விட 3 மடங்கு வீரியம்-ஒருநாள் கொரோனா மரணங்கள் 100ஐ தாண்டியது!
கொழும்பு: இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா வைரஸ் இலங்கையில் 3 மடங்கு வீரியத்துடன் பரவி உள்ளது. இலங்கையில் ஒருநாள் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியதாக உள்ளது.
உலக நாடுகளில் டெல்டா வகை வைரஸ் இந்தியாவில்தான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது உலகின் பல நாடுகளையும் இந்த வைரஸ் பல மடங்கு வீரியத்துடன் தாக்கி வருகிறது.

அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியதாக உள்ளது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 657 ஆகவும் உள்ளது.
மிகச் சிறிய குட்டி தீவு நாடான இலங்கையிலும் மிக வீரியமாக தாக்கி வருகிறது டெல்டா வகை வைரஸ். இது இந்தியாவைவிட 3 மடங்கு வீரியம் கொண்டதாக இருப்பதாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அத்துடன் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியதாகவும் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 100 ஐ தாண்டியதாகவும் இருப்பதால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இலங்கையின் கொரோனா மரணங்கள் நேற்று 118 ஆக இருந்தது. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 18வது இடத்தில் இருக்கிறது. இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களும் கூட வீரியமான இந்த டெல்டா வைரஸில் இருந்து தப்பமுடியவில்லை என்கின்றன செய்திகள். இலங்கையில் தொடர்ந்து கொரோனா மரணங்கள் 100க்கும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் பெரும் அச்சமும் நிலவுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications