நாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றியது ஏன்... சிறிசேனாவுக்கு சபாநாயகர் கேள்வி!
கொழும்பு : நாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றியது ஏன் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசியலில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பற்றவைத்த நெருப்பு அணையாமல் ஜோதியாக சுடர்விட்டு எரிந்து கொண்டே இருக்கிறது. சிறிசேனா வைத்த நெருப்பு இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கே வழிவகுக்குமா என்று உலக நாடுகள் பலவும் உற்று நோக்கி வருகின்றன.
பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தன்னை கொல்ல சதித் திட்டம் தீட்டினார், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருந்தார் என்று காரணம் சொல்லி அவரை பிரதமர் பதவியில் இருந்து சிறிசேனா நீக்கினார். இந்த சூட்டோடு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ராஜபக்சேவை பிரதமராக்கியதற்கு ரணில் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பெரும்பான்மையில்லாததால் எதிர்ப்பு
ராஜபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு பெரும்பான்மையே இல்லாத போது மஹிந்த எப்படி பிரதமராக முடியும் என்பது தான் எதிர் தரப்பின் கேள்வி. இதனால் அதிபர் சிறிசேனா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ரணிலுக்கு ஜெயசூர்யா ஆதரவு
மேலும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார். ரணிலுக்கே பெரும்பான்மை இருப்பதால் அவர் தான் பிரதமர் என்று தொடர்ந்து கூறியும் வருகிறார்.

முடக்கப்பட்ட நாடாளுமன்றம்
ராஜபக்சேவை பிரதமராக அறிவித்ததின் அடுத்த நகர்வாக நாடாளுமன்றத்தை நவம்பர் 16ம் தேதி வரை தற்காலிகமாக முடக்கி வைத்தார் சிறிசேனா. ஆனால் சர்வதேச நாடுகளும், ஐ.நா சபையும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் பெரும்பான்மையை நிரூபிப்பவரே ஜனநாயக முறையில் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று அழுத்தம் தந்தன.

ஏன் இந்த மாற்றம்
இதன் விளைவாக சிறிசேனா நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று நேற்றைய தினம் அறிவித்தார். இந்நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா சிறிசேனாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நாடாளுமன்றம் கூடும் தேதியை முன்கூட்டியே மாற்றியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உறுதியாக இருக்கும் ஜெயசூர்யா
மஹிந்த ராஜபக்சேவை ஒரு போதும் பிரதமராக ஏற்க முடியாது. பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் என்றும் ஜெயசூர்யா தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications