இலங்கை மக்களின் ரிங் டோனாக மாறிய நாங்க வாழணுமா? சாகணுமா? சொல்லுங்க!... புரட்சிப்பாடல்
நாங்க வாழணுமா? சாகணுமா சொல்லுங்க! இலங்கை மக்களின் அவலம் பற்றி பேசும் டி.ராஜேந்தர் பாடிய மக்கள் புரட்சிப்பாடல் பல லட்சம் பேரின் மனதை உருக்கியுள்ளது.
கொழும்பு: தமிழ் சினிமா பாடலாசிரியரும், பிரபல இலங்கை கவிஞருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய "நாங்க வாழணுமா? சாகணுமா? சொல்லுங்க!" பாடல் உலகமெங்கும் அனைவராலும் பகிரப்படுகிறது. இப்பாடல் வெளியாகி 6 நாட்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பாடல் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றுள்ளதோடு சுமார் அறுபதாயிரம் பேர் பாடலை பகிர்ந்துள்ளனர். இலங்கையில் உள்ள மக்களில் ஒவ்வொருவர் தொலைபேசியிலும் "வாழணுமா சாகணுமா" பாடலே ஒலிக்கிறது.
இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடிகளால் வீதிக்கு இறங்கி ஊழல் நிறைந்த அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.போராட்டம் இரவு பகலாக இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசலில் தொடர்கிறது.
இப்போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் வேறுபாடுகளை மறந்து ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர்.
இப்போராட்டம் குறித்து நாங்க வாழணுமா? சாகணுமா? சொல்லுங்க! என்ற பாடலை நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் பாடி வெளியிட்டுள்ளார். பாடலுக்கு ஜே.சமீல் இசையமைக்க இலங்கையின் பிரபல கவிஞர்,தமிழ் சினிமா பாடலாசிரியர் அஸ்மின் வரிகளை எழுதியுள்ளார். போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் இப்பாடல் உலகளவில் அதிகம் பகிரப்படுகிறது.

இலங்கை மக்களின் அவலம்
தமிழ் சினிமா பாடலாசிரியரும், பிரபல இலங்கை கவிஞருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய "நாங்க வாழணுமா? சாகணுமா? சொல்லுங்க!" பாடல் உலகமெங்கும் அனைவராலும் பகிரப்படுகிறது. "சாதனை தமிழா" தயாரிப்பில் ஜே.சமீல் இசையமைத்துள்ள இப்பாடலை இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் உணர்வுபூர்வமாக பாடியுள்ளார். இப்பாடலை டிவிட்டரில் நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார்.இப்பாடல் வெளியாகி இலங்கையில் மட்டுமல்ல தமிழ் பேசும் உலகம் எங்கும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இலங்கை மக்களின் ரிங்டோன்
இப்பாடல் வெளியாகி 6 நாட்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பாடல் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றுள்ளதோடு சுமார் அறுபதாயிரம் பேர் பாடலை பகிர்ந்துள்ளனர். இப்பாடல் டிக்டாக் வலைத்தளத்திலும் முப்பாதாயிரம் லைக்குகளை குவித்துள்ளது. இலங்கையில் உள்ள மக்களில் ஒவ்வொருவர் தொலைபேசியிலும் "வாழணுமா சாகணுமா" பாடலே ஒலிக்கிறது. பாடலுக்கு கலைத்துறை, அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டி.ராஜேந்தர்
இப்பாடல் பற்றி பேசிய டி.ராஜேந்தர், "இலங்கையில் போராடும் மக்களின் படும் அவஸ்தயை, வலியை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப்பாடலை பாடியுள்ளேன். யாப்பிலக்கணம் கற்ற தமிழ் இலக்கியவாதியான இலங்கை கவிஞர் அஸ்மின், தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதி வருபவர் அவருக்கும் எனக்கும் நெடுங்காலமாக நட்பு உள்ளது. அவர் எழுதியுள்ள இந்தப்பாடலை நான் பாட வேண்டும் என்றார். எனவே, இலங்கை மக்கள் படும் பாடு உலகம் முழுக்க தெரிய வேண்டும் என்றே இந்த பாடலை பாடியுள்ளேன். இலங்கை மக்கள் படும் துயரம் நீங்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்"
இப்பாடலுக்கு தயாரிப்பாளர் சங்க செயலாளரும் இயக்குனரும்,பாடலாசிரியருமான ஆர்.வி.உதயகுமார் தொலைபேசியில் கவிஞர் அஸ்மினை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுபோல் மலேசியாவின் மனித வள அமைச்சர் மாண்புமிகு டத்தோ சரவணன், "பாடல் மனதை நெருடக்கூடியதாக அமைந்துள்ளது.நான் நினைக்கின்றேன் இந்த நூற்றாண்டில் பேசப்படக்குடிய கவிஞராக நிச்சயம் இருப்பீர்கள் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்,"காலத்திற்குப் பொருத்தமான முயற்சி. பாடலை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள்" என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர்,ரவூப் ஹக்கீம், "சுனாமி அனர்த்தங்களின்போது வெளிவந்த கவிதைகளில் இலக்கிய நயம், சொல்லாடல், மரபிலக்கணம் என்பவற்றோடு யதார்த்தமான என்னைக் கவர்ந்த கவிதை அஸ்மினின் "உலகக் கோப்பையை வென்ற சுனாமி" ஆகும். காலத்தோடு பயணிக்கும் முன்வரிசை கவிஞர்களில் ஒருவராக பொத்துவில் அஸ்மினை குறிப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஸாத் பதியுதீன், "இலங்கை மக்களின் துன்பியல் வாழ்க்கையை புதிய வடிவில் உலகரியச் செய்தார் கவிஞர் பொத்துவில் அஸ்மின்" என்று தெரிவித்துள்ளார்.ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ,முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ,கிழக்குமாகாண முன்னாள் ஆளுனர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் உட்பட பல பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இலங்கை கண்டி ராஜ்ஜியத்தின் கடைசி மன்னான "கண்ணுச்சாமி" என்ற இயற்பெயர் கொண்ட விக்கிரமராஜசிங்கனின் மதுரையில் வசிக்கும் வாரிசுகளும் பாராட்டுக்களை இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
"அஸ்மின் அவர்களுக்கு இலங்கையை ஆண்ட கடைசி மன்னன் விக்கிரம ராஜசிங்கனின் வாரிசுகள் ஆகிய நாங்கள் அனைவரும் தங்களை மனமாற வாழ்த்துகின்றோம். ஏனென்றால் நம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் தாங்கள் "வாழணுமா சாகணுமா என்ற பாடலை மக்களின் உணர்வுகளை உணர்ந்து எழுதியமைக்கு நம்நாட்டு மக்களின் சார்பாகவும் உலக மக்களின் சார்பாகவும் எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று எஸ்.பால் ராஜா, பி. ஹரிஹரராஜா, வி. அசோக்ராஜா, ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நம் நாடு வளம் பெறவும் நம் மக்கள் நலம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு இருக்கின்றோம். அடுத்தபடியாக நம் மக்கள் சோர்வடையாமல் இருக்க தன்னம்பிக்கை தூண்டும் வகையில் நம் வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் அது மிக விரைவில் மேலே வரும் அதேபோல் நம் நாடும் நம் மக்களும் மேலே வருவோம் என்ற தலைப்பில் தாங்கள் பாடல் அமைத்து எழுதும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக பாடகர் கவிஞர் அஸ்மின் கூறியுள்ளார்.

உணர்வுகளைப் பதிவு செய்தேன்
இலங்கையில் மட்டுமல்ல உலகளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போதும் நான் அதனை கவிதையாக பாடலாக பதிவு செய்வது என் வழமை. 2000 ஆண்டு இலங்கை முஸ்லீம்களின் தலைவர் அஸ்ரப் மறைந்தபோது ஆண்டு "அரசியல் வானில் அஸ்ரப் எனும் விடிவெள்ளி", சுனாமி அடித்தபோது "உலக கோப்பையை வென்ற சுனாமி",இறுதிக்கட்ட ஈழப்போரின்போது "நவீன துச்சாதனனும் நாயான யூதாஸூம்"
சென்னையில் வெள்ளம் வந்தபோது "கொல்லென கொல்லும் மழை", கவிதையாக , இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்தபோது "போங்கடா நாங்க பொங்கலடா" , கொரனாவின்போது "நாளை நமக்கு ஒரு காலம் வரும் பாடல்", ஜெயலலிதா மறைந்த போது "வானே இடிந்ததம்மா" , எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எம்மை விட்டு பிரிந்தபோது "எழுந்துவா இசையே" என பாடல்களாக இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இன்னும் உண்டு...எனது உணர்வுகளை பதிவு செய்திருந்தேன்.

இலங்கை போராட்டம்
அந்த வகையில் இலங்கை மக்களின் வாழ்க்கை சீரழிந்து அரசு எதிராக மக்கள் கொந்தளித்து வீதிக்கு வந்தபோது இந்த பாடலினை எழுதினேன். போராட்டத்தின் ஆரம்பத்திலே பாடலின் பல்லவி, அனுபல்லவி எழுதிவைத்துவிட்டு பணிச்சுமையால் அதை பூர்த்தி செய்யாதிருந்தேன். ஒருநாள் ஆஸ்திரேலியாவில் வாழும் இனிய நண்பர், இசையமைப்பாளர் அருண்குமாரசுவாமி அவர்கள் என்னை தொடர்பு கொண்டு இந்த போராட்டம் பற்றி ஒரு பாடல் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். நான் அவரிடம் ஒரு பாடல் எழுதி வைத்திருக்கிறேன். அதை பூர்த்தி செய்து தருகிறேன் என்று சொன்னேன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவரால் அந்தப் பாடலை செய்ய முடியாது போனது.அதனால் அவரே வேறு இசையமைப்பாளர்களை பயன்படுத்துங்கள் சொன்னார்.

பாடல் உருவானது எப்படி
2008 ஆண்டு இலங்கை சக்தி Tv யின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சியிலிருந்தே சமீலை எனக்கு தெரியும்.
தமிழ் சினிமாவில் தடம்பதித்துள்ள சமீல் ,இலங்கையில் தேசிய விருதுகள் பல பெற்றவர். இலங்கையின் இளைய தலை முறை இசை அமைப்பாளர்களில் குறிப்பிட்தக்க ஒருவர். அவரோடு இணைந்து இணைந்து முதன் முதலாக பிரபல மசாலா நிறுவனத்துக்கு விளம்பர பாடல் செய்திருந்தோம்.அந்த விளம்பரம் வானொலிகளில் நோன்பு காலத்தில் ஒலிபரப்பாகி கவனம் பெற்றது. எனவே நண்பர் சமீலை தொடர்புகொண்டு இந்த பாடலை செய்வது பற்றி தெரிவித்தேன்.பாடலை வாட்சப் ஊடாக அனுப்பினேன். பாடல் வரிகளை பார்த்துவிட்டு சில மணி நேரங்களிலே மெட்டமைத்து அனுப்பி வைத்தார். மெட்டு கேட்டவுடனே பாடல் ஹிட்டு என்பதை உணர்ந்தேன்.

பாடல் வெற்றிக்கு காரணம்
"வாழணுமா? சாகணுமா?' பாடல் சமீலோடு இணைந்து வெளிவந்த முதல் பாடல். முதல் பாடலே ஒரு வெற்றிப் பாடலாக அமைந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. தமிழ் உணர்வுள்ள இலங்கை மக்கள் மீது உண்மையான பாசம் மிக்கவர் மூத்த இயக்குனர் டி ராஜேந்தர் அவர்கள். அவரை ஈராண்டுகளாக நன்கு தெரியும். நேரில் சந்திக்காமலே அவரோடு நல்ல நட்பு இருந்தது. எனவே அவர்களை தொடர்பு கொண்டு பாடல் பற்றி சொன்னேன். எந்தவித ஊதியமும் வாங்காமல் இலங்கை மக்களுக்காக பாடலை பாடித்தர சம்மதித்தார். பாடலை சென்னையில் ஒலிப்பதிவு செய்தோம். டி ஆர் அவர்களை நேரில் பார்ப்பதே கனவாக இருக்கின்ற நேரத்தில் அவர் எனது பாடலை பாடி இருப்பது நான் பெற்ற வரமே. இந்த பாடலின் வெற்றிக்கு முதன் காரணி டி.ராஜேந்தர் என்றே சொல்லலாம்.

மக்களின் வலி
உலகம் அறிந்த அவர் எமது பாடலை பாடியதால் பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதுபோல் எம்மீது வெளிச்சம் படர ஆரம்பித்துள்ளது.அவரை நன்றியோடு நினைவு கூறுகின்றேன். பாடலை "சாதனை தமிழா" நிறுவனம் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. இந்த வேளையில் இந்த பாடலுக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றிய தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் இனிய நண்பர் எஸ். சக்திவேல், கொம்புவச்ச சிங்கம் ,இது கதிர்வேலன் காதல் படங்களின் எடிட்டர்,இனிய நண்பர் டான் போஸ்கோ, பாடலின் ஒலிப்பதிவுக்கு உதவிய நண்பர் ,நடிகர் எஸ்,வேல், பாடல்கள் சிறப்பாக வெளிவருவதற்கு பல வகையிலும் உந்து சக்தியாக இருந்த தோழி,கவிதாயினி சப்னா தெளபீக் ஆகியோருக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பாடல் இலங்கை ,தமிழகம் மட்டுமல்ல தமிழ் பேசும் உலகம் கவனம் பெற்றுள்ளது குறித்து நான் மிகவும் சந்தோசம் அடைகின்றேன். மக்களின் வலியை நான் பதிவு செய்ததால் இந்த பாடலை மக்கள் கொண்டாடுகின்றார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications