Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிபர் கோத்தபயவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? இலங்கை எதிர்க்கட்சி பகிரங்க எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: ‛‛இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தீர்வு காண வேண்டும். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதார பிரச்சனை குறித்து மக்களிடம் உரையாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்'' என அந்நாட்டின் எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகய (எஸ்ஜேபி) தலைவர் சஜித் பிரேமதேசா கூறியுள்ளார்.

இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தினமும் 10 மணிநேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியினரும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் இன்னும் பதவி விலவில்லை. இருப்பினும் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காணுவம் வகையில் நாடாளுமன்றம் கூடினாலும் இன்னும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானம்

நம்பிக்கையில்லா தீர்மானம்

இதனால் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று நாடாளுமன்றம் நடந்தபோது பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில் தான் கூட்டு அமைச்சரவைக்கு மறுப்பு தெரிவித்த பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகய (எஸ்ஜேபி) கட்சி அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

இறுதி முடிவு

இறுதி முடிவு

இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, "அதிபர் கோத்தபய ராஜபக்சே பொருளாதார நெருக்கடி குறித்து பொதுமக்களுக்கு உரையாற்ற வேண்டும். நாட்டு மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலுக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். இதுதொடர்பாக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

பகிர்ந்தளிக்க வேண்டும்

பகிர்ந்தளிக்க வேண்டும்

மேலும் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்ற துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என அனைத்து துறைகளையும் தன்னிடமே வைத்துள்ளார். இதை பிரித்து வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே விவாதித்துள்ளோம்'' என்றார். முன்னதாக இவர் இலங்கையில் அதிகாரம் படைத்த அதிபர் முறைமையை நீக்க வேண்டும். மேலும் பிரதமரும் சர்வாதிகாரமாக செயல்பட அனுமதிக்காமல் இருவருக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளித்து நாடாளுமன்றத்தை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தகது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+