நிதி நெருக்கடி: இலங்கைக்கு ரூ5,600 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் தந்தது உலக வங்கி!
கொழும்பு: மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு ரூ5,600 கோடி கடன் உதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்த பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கிப் போனது. இதனால் பொதுமக்கள் தன்னிச்சையாக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மக்களின் இந்த புரட்சியை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அத்துடன் இலங்கையை விட்டு தப்பி ஓடி நாடு திரும்பினார். இதேபோல ஜனாதிபதி பதவியில் இருந்த கோத்தபாய ராஜபக்சேவும் உயிருக்கு அஞ்சி வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். பின்னர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் தற்போது ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, இந்தியா பெருந்தொகையான கடனுதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. சீனாவும் இலங்கைக்கு கடன் உதவி வழங்கினாலும் குறுகிய கால கடன்களை மட்டுமே தருகிறது. அந்த குறுகிய காலத்தில் கடன் திருப்பி செலுத்தப்படாவிட்டால் குறிப்பிட்ட நிலப்பகுதிகளை இலங்கையிடம் இருந்து சீனா கைப்பற்றிக் கொள்வதும் தொடருகிறது.
இந்த பின்னணியில் இலங்கைக்கு உலக வங்கி கடனுதவி வழங்குவது தொடர்பாகவும் ஆலோசைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு கடன் உதவி வழங்குவது என உலக வங்கியின் இயக்குநர்கள் கூட்டம் அண்மையில் முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ரூ5,600 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. முன்னதாக சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கு பெரும் தொகை கடன் வழங்க ஒப்புதல் தெரிவித்திருந்தது. இந்த கடன்களால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி அடையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications