கடலூரில் சரித்திர பதிவேடு ரவுடி வங்கிக் கணக்கில் ஒரே மாதத்தில் 2.5 கோடி டெபாசிட்.. அடுத்து ட்விஸ்ட்
கடலூர்: கடலூரில் சரித்திர பதிவேடு ரவுடி வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி டெபாசிட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் என ஒரு மாத்தில் 2.5 கோடி ரூபாய் பணம் வங்கி கணக்குகளுக்கு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கனரா வங்கி போலீசில் தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கி கணக்கையும் முடக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு கூலிப்படை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மிகப்பெரிய அளவில் குரல்கள் எழுந்துள்ளது. அதிகாரபோட்டியில் உள்ளவர்கள், சொத்து தகராறில் உள்ளவர்கள், இரு தரப்பு முன்விரோதம், சாதி ரீதியான சண்டைகள், ஆணவ படுகொலை, அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் போன்ற பல்வேறு விவகாரங்களுக்கு கூலிப்படையை ஏவி கொலை செய்வது அதிகரித்துள்ளது.

இந்த விவாகரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் கூலிப்படைகளுக்கு எதிராக தமிழ்நாடுமுழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு 50 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்தது கூட அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று திடீரென சந்தேகத்திற்கு இடமான பணப்பரிமாற்றம் நடந்தால் வங்கிகள், வருமான வரித்துறை மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம் ஆகும். அத்துடன் வங்கிகணக்கையும் முடக்கி வைப்பார்கள். விசாரணைக்கு பிறகே வங்கி கணக்கு முடக்கம் ரத்து செய்யப்படும்.
அந்த வகையில் கடலூரில் சரித்திர பதிவேடு ரவுடியான அசோக் குமாரின் வங்கி கணக்கில் 2.5 கோடி ரூபாய் ஒரே மாதத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் என ஒரே மாதத்தில் 2.5 கோடி ரூபாய் வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கனரா வங்கி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதையடுத்த போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அசோக் குமாரின் வங்கி கணக்கை கனரா வங்கி முடக்கி உள்ளது.
அசோக் குமாருக்கு பணம் அனுப்பிய 7 பேர் யார் யார் என கண்டறிந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடலூரில் சரித்திர பதிவேடு ரவுடி வங்கி கணக்கில் ஒரே மாதத்தில் 2.5 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications