கணவன் + 2 கள்ளக்காதலன்கள்.. மகாலட்சுமி செய்த காரியத்தை பாருங்க.. பரிதாப வேல்முருகன்..!
கள்ளக்காதலனை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்
கடலூர்: வேல்முருகனை கொன்றது யாராக இருக்கும் என்று கடலூர் போலீசார் திணறி வந்த நிலையில், இப்போது ஒரு பெண் சிக்கி கொண்டுள்ளார்.. அவர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு, மிரண்டு போயுள்ளனர் போலீசார்..!
சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சிவக்குமார்.. இவரது மனைவி மகாலட்சுமி.. இவருக்கு 40 வயதாகிறது..
இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் 2 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.. அவருக்கு 50 வயதாகிறது.. கரிவெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திலேயே வேல்முருகனின் சடலம் விழுந்து கிடந்தது,

வழக்குப்பதிவு
இது தொடர்பாக சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி சுந்தரம் மற்றும் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால் வேல்முருகன் உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன.. யாரோ அடித்து கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார், சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்..

அடித்து கொலை
அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கட்டையால் அடித்து வேல்முருகன் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.. இதையடுத்து, அந்த கிராமத்து மக்களிடமே விசாரணை துரிதமானது.. அப்போதுதான் மகாலட்சுமியின் பெயர் அடிபட்டது.. அவருடன் எம்ஜிஆர் (எ) ராமச்சந்திரன் என்பவரின் பெயரும் சேர்ந்தே அடிபட்டது.. 2 பேரையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

வாக்குமூலம்
இதில் மகாலட்சுமி தந்த வாக்குமூலம்தான் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.. மகாலட்சுமி போலீசில் சொன்னதாவது எனக்கும் வேல்முருகனுக்கும் 4 வருடங்களாக தவறான பழக்கம் இருக்கிறது.. அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்தோம்.. ஆனால், இதே கிராமத்தை சேர்ந்த எம்ஜிஆர் என்ற ராமச்சந்திரனுடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதலை, அந்த கள்ளக்காதலன் வேல்முருகன் கண்டித்தார்... கடந்த 24ம் தேதி இரவு 10 மணிக்கு என் வீட்டுக்கு வேல்முருகன் குடிபோதையில் வந்தார்.. அப்போது என் வீட்டில் கணவரும், குழந்தைகளும் இல்லை..

வேல்முருகன்
அதனால்தான் வீட்டுக்கு வந்தார். அப்போது, நான் ராமச்சந்திரனுடன் போனில் பேசிக்கொண்டிருந்தேன்... இதை பார்த்ததும் வேல்முருகன் ஆத்திரமடைந்து, போன்ல யாரு? ஏன் அவனுடன் பேசுகிறாய்? என்று கண்டித்தார். இது எங்களுக்குள் வாக்குவாதமாய் மாறியது.. உடனே வேல்முருகன், என்னை உல்லாசத்திற்கு வருமாறு அழைத்தார். அதற்கு நான் மறுப்பு சொன்னேன்.. அதனால் வாக்குவாதம் அதிகமாக முற்றியது... ஆத்திரம் அடைந்த நான், கீழே கிடந்த கட்டையை எடுத்து வேல்முருகனை தலையில் ஓங்கி அடித்தேன்..

வாக்குமூலம்
ரத்த வெள்ளத்தில் வேல்முருகன் சுருண்டு விழுந்தார்.. குடிபோதையில் தான் விழுந்து கிடக்கிறார் என்று நினைத்து விட்டுவிட்டேன்.. மறுபடியும் கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தேன்.. உடம்பில் அசைவே இல்லை.. அப்போதுதான் வேல்முருகன் இறந்துவிட்ட விஷயம் எனக்கு தெரியவந்தது.. உடனே ராமச்சந்திரனுக்கு போனை போட்டு வரவழைத்தேன்.. பிறகு 2 பேரும் சேர்ந்துதான், வேல்முருகன் உடலை தூக்கிசென்று பள்ளி வளாகத்தில் போட்டு விட்டு வந்து விட்டோம் என்று போலீசில் வாக்குமூலம் தந்தார் மகாலட்சுமி.. இப்போது இந்த கள்ளக்காதல் ஜோடி ஜெயிலில் உள்ளது..
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications