நடிகைகளுடன் உல்லாசம்.. 2 மனைவிகள் வேற.. லட்சக்கணக்கில் பணமும் அபேஸ்.. அதிர வைத்த 60 வயது தாத்தா
சினிமா நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க பணத்தை கொள்ளையடித்த 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கடலூர்: பண்ருட்டியில் சமீபத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சுந்தர் என்பவர் விதைகள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடையை வைத்து நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி காலை வழக்கம் போல கடையை திறக்கலாம் என்று சென்று பார்க்கையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறியிருந்துள்ளது. இதனையடுத்து உள்ளே சென்ற பணம் வைத்திருந்த லாக்கரை திறந்து பார்த்தபோது, லாக்கர் உடைக்கப்பட்டு பணம் ரூ.4.60 லட்சம் திருடுபோயுள்ளது.
உடனடியாக சுந்தர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை ஆய்வு நிபுணர்கள் உதவியுடன் குற்றவாளி குறித்த தடயங்களை சேகரித்தனர். அதேபோல பக்கத்து கடைகளிலிருந்து சிசிடிவி காட்சிகளையும் பதிவு செய்தனர். இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், விழுப்புரம் கடலூர் என சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில், இந்த சிசிடிவி காட்சியில் இருக்கும் நபர் குறித்து எந்த தகவலும் பதிவாகியிருக்கவில்லை.

கொள்ளை
இதனையடுத்து இந்த சிசிடிவி காட்சிகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் உள்ள காவல் நிலையத்தில் சிசிடிவியில் பதிவான நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சிசிடியில் இருக்கும் நபர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பது தெரிய வந்தது. எனவே இவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை ஒன்றை அமைத்தனர். அவர்கள் கேராளவுக்கு சென்று சாகுல் ஹமீதை கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்.

கைது
இவரிடம் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இவர் மீது மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை என தென்மாவட்டங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறையினர் தேடி வந்தனர். அப்படி இருக்கையில் அவர் தற்போது கடலூரில் சிக்கியிருக்கிறார். இவருக்கு திருட்டு தொழில் என்பது பிரதானம் கிடையாது. இவர் அடிப்படையில் ஒரு மெடிக்கல் ரெப். ஆனால் இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு வந்திருக்கிறார். அதேபோல மருந்து விற்பனை செய்யும் கடைகளையும் அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்.

உல்லாசம்
இப்படியாகதான் சுந்தரின் கடையில் கொள்ளையடித்திருக்கிறார். சரி எல்லாம் ஓகே திருடிய பணம் எங்கே? என்று விசாரித்தபோது ரூ.1.5 லட்சத்தை மட்டும் கையில் கொடுத்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ந்து போன காவல்துறையினர் திருடியது மொத்தம் ரூ.4.6 லட்சம் ஆனால் இப்போது வெறும் ரூ.1.5 லட்சம்தான் இருக்கிறது. மீதி எங்கே என்று கேட்டிருக்கின்றனர். இதற்கு சாகுல் ஹமீது கூறிய பதில்தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது இவர் ரூ.3 லட்சத்தை நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க செலவிட்டுள்ளார்.

இரண்டு மனைவிகள்
இவருக்கு மதுரையில் ஒரு மனைவியும், திருவனந்தபுரத்தில் ஒரு மனைவியும் இருக்கின்றனர். இருப்பினும், இது போதாது என கேரளாவில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். அவருடைய மொபைல் எண்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த விஷயங்கள் அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 60 வயதில் நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க திருட்டு தொழிலில் ஒருவர் ஈடுபட்டிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications