கடலூரில் கடவுள் இருக்காரு குமாரு.. செயின் பறித்த பெண்ணிடமே சிக்கிய திருடன்.. அதுவும் எப்படி?
கடலூர்: கடலூர் அருகே பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற திருடன், வேறு ஒரு இடத்தில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு செயின் பறிப்பால் காயம் அடைந்த பெண் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திருடன் மருத்துவமனையில் இருப்பதை பார்த்த அந்த பெண் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் திருடன் வசமாக சிக்கிக்கொண்டார்.
சாலையில் நடந்து செல்லும் பெண்களிடமும், இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடமும் சிலர் நகை பறிப்பில் ஈடுபடுகிறார்கள். அப்படி நகை பறிப்பில் ஈடுபடும் திருடர்கள், பின்னாளில் ஏதோ ஒரு காரணத்தால் திருடிய பெண்ணிடம் சிக்கினால் என்னாகும்.. அதுவும் விபத்தில் சிக்கி மாட்டினால் என்னாகும்.. அதுதான் கடலூர் பகுதியில் நடந்துள்ளது

கடலூர் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்று தப்பிய திருடன் வாகன விபத்தில் சிக்கிய நிலையில் , அந்த பெண்ணும் திருடனும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் திருடன் வசமாக போலீசில் சிக்கி கொண்டார். இதுபற்றி முழுமையாக பார்ப்போம்.
கடலூரைச் சேர்ந்த சந்தோஷ்- சுதா தம்பதி தங்கள் இரு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது மற்றொரு இருசக்கர வாகனத்தில் அஜித் என்ற திருடன் மின்னல் வேகத்தில் வந்துள்ளார். அப்போது திருடன் அஜித் திடீரென பைக்கை உரசுவது போல் வந்ததோடு சுதா அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார் உடனடியாக சுதாரித்துக் கொண்ட சுதா, திருடனுடைய டி-ஷர்ட்டை பிடித்து இழுத்துள்ளார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த திருடன் அஜித்தும், அந்த பெண்ணும் கீழே விழுந்துள்ளார்கள்
உடனடியாக செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற அஜித்குமார் அங்கிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார். கீழே விழுந்ததில் காயமடைந்த சுதா மற்றும் அவருடைய சந்தோஷ் இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் தன்னிடம் ஒரு நபர் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றபோது கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறினார்கள்.
இதனிடையே சுதாவிடம் திருட முயன்று தப்பி சென்ற திருடன் அஜித், சிறிது தூரத்தில் ஏற்பட்ட மற்றொரு வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அதே கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இதனிடையே திருடன் அஜித்குமாரை கண்ட போலீசாருக்கு சந்தேகம் வரவே, அவரது புகைப்படத்தை எடுத்து சுதாவிற்கு மொபைலில் அனுப்பி உள்ளனர். அதை பார்த்த சுதா, செயின் பறிக்க முயன்ற நபர் இவர் தான் என்பதை உறுதி செய்தார். மேலும் அதுகுறித்து போலீசாரிடம் சுதா உடனடியாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அஜித்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணிடம் தங்க செயின் திருட முயன்ற திருடன் வேறு ஒரு விபத்தில் சிக்கி, அதே பெண்ணிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications