Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛துணிவு’ கெட்டப்பில் கடலூரில் அஜித்? மொத்தமாக கூடிய கூட்டம்.. கடைசியில் ட்விஸ்ட்..இப்படி ஆய்டுச்சே!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‛துணிவு'. வரும் 11ம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வர உள்ள நிலையில் ‛துணிவு' பட கெட்டப்பில் கடலூருக்கு நடிகர் அஜித் சென்றதாக தகவல் பரவிய நிலையில் ரசிகர்கள் குவிந்து ‛செல்பி' எடுத்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ட்விஸ்ட் நடந்தது.

தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி வசூலை குவிப்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. மேலும் தீபாவளி, பொங்கல் வேளைகளில் ரீலிசாகும் படங்களின் மீது மக்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் தான் வரும் பொங்கலையொட்டி தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித்தின் படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளன. பல ஆண்டுகளுக்கு பிறகு இருபெரும் நடிகர்களின் படங்கள் ஒன்றாக பொங்கலுக்கு இறங்குகின்றன.

 ஒரே நாளில் துணிவு-வாரிசு

ஒரே நாளில் துணிவு-வாரிசு

அதன்படி இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‛வாரிசு' திரைப்படமும், அதே போல் இயக்குனர் எச்.வினோத் இயக்கிய நடிகர் அஜித்தின் ‛துணிவு' படமும் வரும் 11ம் தேதி ஒன்றாக திரைக்கு வர உள்ளது. இதற்கு முன்பு வீரம், ஜில்லா படங்கள் ஒன்றாக நேருக்கு நேர் மோதிய நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய், அஜித் படங்கள் ஒன்றாக திரைக்கு வருகின்றன. இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அப்டேட்டுகளால் தொடர் டிரெண்டிங்

அப்டேட்டுகளால் தொடர் டிரெண்டிங்

இதற்கிடையே தான் வாரிசு, துணிவு படங்களின் போஸ்டர்கள், டிரெய்லர்கள் உள்பட அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி இணையத்தை கலக்கி டிரெண்ட்டிங்கில் இடம்பிடித்து வருகின்றன. மேலும் வழக்கம்போல் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே கருத்து மோதல்கள் தொடங்கி உள்ளன. ஒரே தேதியில் துணிவு, வாரிசு படங்கள் திரைக்கு வந்தாலும் கூட ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டை வாங்கி வருகின்றனர்.

 கடலூரில் அஜித்?

கடலூரில் அஜித்?

இந்நிலையில் தான் தான் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்னம் ஸ்ரீபூவராக பெருமாள் கோவிலில் நடிகர் அஜித் வந்ததாக தகவல்கள் பரவின. இதையடுத்து அஜித் ரசிகர்கள் உள்பட ஏராளமான இளைஞர்கள் அங்கு குவிந்தனர். அப்போது துணிவு பட கெட்டப்பில் வெள்ளை உடை அணிந்து நின்றார். இதனை பார்த்தவர்கள் இன்னும் உற்சாகம் அடைந்தனர். நம்ம ஊருக்கு நடிகர் அஜித் வந்திருக்காரு டோய் எனவும், அஜித்தை நேரில் பார்க்கும் மகிழ்ச்சியில் ஆவலாக அவர் அருகே சென்றனர்.

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

அப்போது தான் ட்விஸ்ட் காத்திருந்தது. அதாவது அங்கு துணிவு பட கெட்டப்பில் நின்ற நபர் நடிகர் அஜித் இல்லை என்பதும், அவர் அஜித்தின் துணிவு படகெட்டப்பில் வந்த இன்னொரு நபர் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் கூட மனம் தளராத ரசிகர்கள், இளைஞர்கள் டூப் அஜித்துடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டு மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+