நர்ஸ்சுடன் 8 ஆண்டு காதல்.. திருமணம் என்றதுமே எஸ்கேப்பான காதலன்.. காதலி செய்த தரமான சம்பவம்!
கடலூர்: 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலனை பெரும் போராட்டத்துக்கு பிறகு நர்ஸ் கரம் பிடித்தார். இதையடுத்து கணவரின் குடும்பத்தினரிடம் பாதுகாப்பு கோரி நர்சும், தனக்கு கட்டாயம் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக காதலனும் போலீசில் மாறி மாறி புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் சென்னையில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் பழகி வந்துள்ளனர்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் இளம்பெண் தனது காதலன் தமிழரசனிடம் திருமணம் குறித்து பேசி உள்ளார். ஆனால் தமிழரசன் திருமணத்துக்கு உடன்படவில்லை.
ஒவ்வொரு முறை திருமணம் செய்து கொள்ளும்படி கூறும்போதும் தமிழரசன் தட்டிக்கழித்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த இளம்பெண் சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகாரளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி அந்த காதலி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து நேற்றைய தினம் தமிழரசன் மற்றும் புகாரளித்த இளம்பெண் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். அனைவரும் விசாரணைக்கு சென்றனர். அப்போது போலீஸ் தரப்பில், ‛‛இருகுடும்பத்தினரும் பேசி சுமூக முடிவுக்கு வாருங்கள்'' எனக்கூறினர்.

அப்போது தமிழரசன் மற்றும் இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுக்கப்பட்டது. தமிழரசன் மற்றும் இளம்பெண்ணை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து வைக்க முன்றனர். அப்போது தமிழரசன் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து பிடிவாதம் பிடித்தார். மேலும் இளம்பெண்ணின் கழுத்தில் மாலை அணிவிக்க மறுத்ததோடு, தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து எஸ்கேப்பாக முயன்றார்.
ஆனால் அங்கிருந்தவர்கள் தமிழரசனை பிடித்து இளம்பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து அந்த இளம்பெண் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்தார். தனக்கு கணவரின் குடும்பத்தில் சிலரிடம் இருந்து மிரட்டல் உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.
அதேவேளையில் தமிழரசன் சார்பில் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கட்டாய திருமணம் செய்த வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications