மதுரைக்காரங்க விவரமானங்க? கடலூர்காரங்க மட்டும் ஏமாளிகளா? அட்டாக்கை ஆரம்பித்த அன்புமணி! பரபர புகார்
கடலூர்: மதுரைக்கும், தஞ்சாவூருக்கும் குரல் கொடுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தை புறக்கணிப்பது ஏன்? எனவும், ஒரு காலத்தில் 'தன்னூற்று' பெருக்கெடுத்து ஓடிய நெய்வேலியில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலையை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி விட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் 100 நாட்கள் சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து நெய்வேலியில் பொதுமக்கள் மற்றும் பாமக தொண்டர்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய அவர்," என்எல்சி நிறுவனம் 'ஸ்லோ பாய்சன்' கொடுத்து நெய்வேலி சுற்றுவட்டார பகுதி மக்களை கொன்று வருகிறது.

அன்புமணி ராமதாஸ்
என்எல்சி செய்யும் அநியாயங்களை தொடர்ந்து பாமக அம்பலப்படுத்தி வருகிறது. நாங்கள் மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறோம். இந்த மண்ணை பாதுகாக்க பாமக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றது. நாம் இடையில் வந்தவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண் உள்ளது. நமக்குப் பிறகு வரும் சந்ததியினருக்கு இந்த மண்ணை விட்டு செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த மண்ணை அழிப்பதற்கு நாம் யாருக்கும் உரிமை கிடையாது.
நெய்வேலி என்எல்சி
என்எல்சிநிறுவனத்திற்காக கடலூர் மாவட்ட அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், சி.வெ. கணேசனும் வரிந்து கட்டிக் கொண்டு செல்கிறார்கள். என்எல்சி நிறுவனத்தால் கடலூர் மக்களுக்கு என்ன பயன்? என்எல்சி நிறுவனம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்துள்ளதா? அனைத்து வேலைகளையும் அவன் தற்போது தற்காலிக வேலைகளாக மாற்றி விட்டான். என்எல்சி நிறுவனம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கொடுக்காமல் பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற வட மாநில இளைஞர்களுக்கு தான் வேலை கொடுக்கிறார்கள். நிலத்தை கொடுத்த ஏழைகள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
நெய்வேலி தண்ணீர்
உலகிலேயே 'தன்னூற்று' இருக்கும் இடங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று ஆஸ்திரேலியா இன்னொன்று கடலூர் மாவட்டம் நெய்வேலி. தன்னூற்றாக தண்ணீர் பீறிட்டு கொண்டு மேலே அடிக்கும். வீடு கட்டுவதற்காக அடித்தளம் தோண்டினால் வெறும் எட்டு அடிகளில் தண்ணீர் கிடைக்கும். ஆனால் தற்போது கடலூர் மாவட்டத்தில் 800 அடி தோண்டினால் தான் தண்ணீர் கிடைக்கிறது அந்த அளவிற்கு நிலத்தடி நீரை உறிஞ்சப்பட்டு விட்டது. இதற்கு முழு காரணம் என்எல்சி நிறுவனம்தான்.
முக ஸ்டாலின்
மதுரைக்கும், தஞ்சாவூருக்கும் குரல் கொடுக்கும் தமிழக முதலமைச்சர் கடலூர் மாவட்டத்தை புறக்கணிப்பது ஏன்? தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் வந்தால் முதலமைச்சர் ஆவேசமாக வந்து குரல் கொடுக்கிறார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வந்தால் முதலமைச்சர் தன்னுடைய பதவியே போனாலும் பரவாயில்லை இதனை தடுத்து நிறுத்துவேன் என சொல்கிறார். ஆனால் கடலூர் மாவட்டத்தில் மூன்றாவது நிலக்கரி சுரங்க கொண்டு வரப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதனை தடுக்க எந்த முயற்சியும் எடுக்க மறுக்கிறார்.
NLC நிறுவனம்
தற்போது கடலூர் மாவட்டத்தில் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைக்க NLC நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில் அதற்கான ஒப்பந்தம் பெறுவதற்கான கோப்புகள் முதலமைச்சரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் ஏற்கக் கூடாது. மீறி ஒப்புதல் கொடுத்தால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். கடலூர் மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்க மாட்டீர்களா? மதுரை மாவட்ட மக்கள் விவரமானவர்கள்.
கடலூர் மாவட்ட மக்கள் ஏமாளிகளா?" என்றார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications