சொத்து பத்திரத்தில் கையெழுத்திட நம்பி மனைவியை அனுப்பிய கணவன்: கொன்று எரித்த பெண் வீட்டார்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சொத்து பத்திரத்தில் கையெழுத்திட நம்பி மனைவியை கணவன் அனுப்பிய நிலையில், பெண் வீட்டார் கொன்று எரித்துவிட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் இளம்பெண்ணின் அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே ப.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த சன்னியாசி மகன் முனியன் (32) இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த முனியன் மகள் அனிதா (31) இவர் சென்னையில் தனியார் மருந்தகத்தில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார்.

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தநிலையில் கடந்த ஆண்டு ( 14.09.2020) தேதி வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

அனிதா பேசவில்லை

அனிதா பேசவில்லை

இதனால் அனிதாவின் குடும்பத்தினர் அனிதாவிடம் பேசாமல் இருந்துள்ளனர். அனிதா தனது வீட்டு சொத்தில் பங்கு கேட்டுள்ளார் இதனால் அனிதாவுக்கும் அவரது அண்ணன் ஆனந்தவேலுக்கும் இடையே ஏற்கனவே சொத்து பிரச்சினை இருந்துள்ளது.

அனிதா கணவர்

அனிதா கணவர்

அனிதா இறந்த தகவலறிந்து நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து கிளம்பி பா.கொத்தனூருக்கு வந்த அவரது கணவர் முனியன் தனது மனைவி இறந்த செய்தியால் கதறி அழுதார். சொத்து பத்திரத்தில் கையெழுத்து போட என் மனைவியை அழைத்து கொன்று விட்டார்கள் என் மனைவி இறந்த தகவலை கூட என்னிடம் தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக அவளது உடலை எரித்து விட்டனர் என் மனைவி சாவில் சந்தேகம் உள்ளது என கூறினார்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இதையடுத்து நேற்று தனது மனைவி அனிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வேப்பூர் காவல் நிலையத்தில் முனியன் புகார் அளித்தார் இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை நடக்கிறது

விசாரணை நடக்கிறது

திட்டக்குடி டி.எஸ்.பி சிவா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அனிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை எரித்த உறவினர்களும் கைது செய்யப்பட உள்ளனர். இந்த கொலை சம்பவத்தால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+