கடலூர் பஸ் ஸ்டாண்டில்.. அரசு பள்ளி மாணவி செய்த குபீர்.. அதென்ன கையில்? முழித்த சேத்தியாதோப்பு.. ச்சே
கடலூர்: கடலூர் பஸ் ஸ்டாண்டில் நடந்துள்ள சம்பவம், தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை, பெற்றோர்கள் பதறிப்போய் பார்த்து வருகிறார்கள்.. அத்துடன் தமிழக கல்வித்துறைக்கும் கோரிக்கைகள் பறந்தவண்ணம் உள்ளது. என்ன நடந்தது?
சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி குறித்த வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி பொதுமக்களை கலங்கடித்து வருகிறது.

அதுமட்டுமல்ல, சிகரெட் பிடிப்பது, பஸ்களில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபட்டு, அந்த வீடியோவும் வெளியாகி பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது..
செங்கல்பட்டு: கடந்த வருடம் ஒரு வீடியோ வெளியாகியிருந்தது. செங்கல்பட்டிலிருந்து தச்சூர் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது, பள்ளி மாணவிகள் பீர் குடித்திருக்கிறார்கள்.. அந்த மாணவிகளில் ஒருவர், பீர் பாட்டிலை அசால்டாக தூக்கிப்பிடித்து அதனை குடிக்க, அவரையடுத்து, பக்கத்தில் இருந்த மற்ற மாணவிகளும், எந்தவித தயக்கமுமின்றி ஒருவர் பின் ஒருவராக அதே பீர் பாட்டில் வாங்கி மாறி மாறி குடித்தார்கள். இதனை சக மாணவி வீடியோ எடுத்திருந்தார்.
"ஏய்.. குடிச்சா வாசனை வருமாடி" என்ற கேட்டுக் கொண்டே அதனை மாணவிகள் ருசித்து குடிப்பதையும் வீடியோவில் காண முடிந்தது.. பக்கத்திலேயே மற்ற பயணிகள் இருந்தபோதிலும், போதையில் மாணவிகள் கூச்சலிட்டு, ரகளை செய்த இந்த வீடியோவை பார்த்து தமிழக மக்கள் அரண்டு போய்விட்டார்கள்.
மாணவிகள்: இப்போதும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பஸ் ஸ்டாண்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்கு பஸ்சுக்காக 2 மாணவிகள் காத்திருக்கிறார்கள். 2 பேருமே ஸ்கூல் யூனிபார்ம் அணிந்துள்ளனர்.. அப்போது, பஸ் ஸ்டாண்டிலேயே பொதுவெளியில், இருவரும் சிகரெட் பிடிக்க துவங்கிவிட்டார்கள்.
பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பயணிகள், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதை வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளனர்.. பஸ் நிலையத்தில் பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் புகைபிடிக்கும் காட்சி, இணையத்தில் வைரலாகி, எல்லாருடைய மனதையும் பதைபதைக்க வைத்து வருகிறது.. பள்ளிக்கல்வித்துறை மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கவலை: பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள், நல்ல பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும், சிறந்த கல்வியையும் கற்க வேண்டும், வாழ்க்கையில் ஒரு நிலைமைக்கு உயர வேண்டும் என்பதற்காக எத்தனையோ பெற்றோர்கள் பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஏராளமான கனவுகளையும், ஆசைகளையும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இதுபோன்ற பிள்ளைகளையெல்லாம் என்னவென்று சொல்வது?? யார் இவர்களை வழிநடத்துவது???












Click it and Unblock the Notifications