தொடரும் வேட்டை! ஸ்டாலின் குறித்து அவதூறு பதிவு.. கடலூர் மாவட்ட பாஜக ஐடி விங்க் தலைவர் அதிரடி கைது
கடலூர்: தமிழக முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை அவதூறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங்க் தலைவரான ஜெய்க்குமாரை நெல்லை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெய்க்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட ஐடி விங்க் தலைவராக உள்ளார். இவர் திமுகவை விமர்சனம் செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்க்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது முதல்வர் ஸ்டாலின் போட்டோவை அவதூறாக சித்தரித்து விமர்சனம் செய்து இருந்தார்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட திமுகவினர் அங்குள்ள போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று அதிகாலையில் கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்துக்கு சென்ற திருநெல்வேலி போலீசார் ஜெய்க்குமாரை கைது செய்தனர்.
இதையடுத்து மேல் விசாரணைக்காக அவர் கீரப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அழைத்து செல்லப்பட்டார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக குறித்த அவதூறு கருத்துகளை பதிவிடும் பாஜகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கடலூர் மேற்கு மாவட்ட ஐடி விங்க் தலைவர் ஜெய்க்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை!












Click it and Unblock the Notifications