கடலூரில் சலூன் கடைக்குள் போன காயத்ரி.. தங்கை மீது பீறிட்ட காதல்.. சித்தப்பா பதறிட்டாரு! அதுக்குன்னு?
கடலூர்: சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், அதற்கேற்றவாறு வன்முறைகளும் தமிழகத்தில் தினந்தோறும் அதிகரித்தவாறே உள்ளன.. நேற்றைய தினம் கடலூரில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட நபர் கைதாகி ஜெயிலில் அடைத்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மற்றும் டிஎஸ்பி லாமேக் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. என்ன நடந்தது சிதம்பரம் பகுதியில்? யாரிந்த காளிதாஸ் சித்தப்பா?
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது வெள்ளகுளம் மேலக்கரை.. இந்த பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ்... இவருக்கு 38 வயதாகிறது.. திருமணமாகிவிட்டது.. இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்..

சிதம்பரம் நகரில் "சால்ட் அண்ட் பெப்பர்" என்ற பெயரில் பியூட்டி பார்லர் அதாவது சலூன்கடை நடத்தி வருகிறார் காளிதாஸ்.. கடந்த 6 வருடமாக இந்த பார்லரை நடத்தி வருகிறார், இவரது பார்லரில் மணி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.. தூரத்து உறவினரான மணி, புதுச்சேரியை சேர்ந்தவர்.. 23 வயதாகிறது..
அண்ணன் - தங்கை
இந்நிலையில், காளிதாஸின் அண்ணன் கோவிந்தராஜ் என்பவரின் மகளுக்கும் வேலுமணிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது, ஆனால், கோவிந்தராஜன் மகள், மணிக்கு தங்கை உறவாகிறது.. இவர்கள் இருவரின் காதலை பற்றி கேள்விப்பட்டமே, குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.. தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தனர். தங்கை முறை உறவு என்று தெரிந்தும் மணி, தன்னுடைய காதலை வளர்த்ததாக தெரிகிறது. இதனால், மணியை வேலையை விட்டே குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர்.
நண்பர் விக்னேஷ்
இது மணிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.. தங்களது காதலை பிரித்த காளிதாஸ் மீது ஆத்திரம் கொண்டார்.. உடனே தன்னுடைய நண்பர் விக்னேஷ் என்பவரை துணைக்கு அழைத்து சென்று, காளிதாஸை கொடூரமாக வெட்டிவிட்டார்.. இதில் காளிதாஸ் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து, சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காளிதாசன் மனைவி காயத்ரி சிதம்பரம் நகர போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் வேலுமணியையும் உறுதுணையாக சென்ற விக்னேஷையும் அதிரடியாக கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்..
காதல் விவகாரம்
சலூன் கடைக்கு காளிதாசின் அண்ணன் கோவிந்தராஜ் அடிக்கடி வருவாராம்.. அப்போது அவரது 22 வயது மகள் காயத்ரியும் வந்து சென்றுள்ளார்.. இதில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. மணிக்கு தனிப்பட்ட முறையில் காளிதாஸ் அட்வைஸ் தந்து, தங்கை முறை பற்றி விளக்கமாக சொல்லி உள்ளார்.
இதை மணி ஏற்பதாக இல்லை.. நேற்றிரவு சலூன் கடைக்குள் சென்று, நான் காயத்ரியை காதலிக்கிறேன், எனக்கே அவளை திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.. இதைக்கேட்டு கோபமடைந்த காயத்ரி சித்தப்பா காளிதாஸ், கடுமையாக மணியை திட்டியிருக்கிறார்.. இதனால் ஏற்பட்ட தகராறில்தான், மறைத்து வைத்திருந்த கத்தியால் காளிதாசை தலை மற்றும் பல இடங்களில் வெட்டிவிட்டாராம் மணி..
இத்தனைக்கும் சலூன் கடையில் மணி சேர்ந்து 3 மாதம்தான் ஆகிறதாம்.. 3 மாதத்திற்குள்ளேயே காதல், கைகலப்பு, கொலை வரை சென்றுள்ள சம்பவம் கடலூரில் பரபரப்பை தந்துவருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications