கடலூருக்கு ஹேப்பி நியூஸ்.. இனி ஒரு நிமிஷம் கூட ரயில்கள் லேட் ஆகாது? தமிழகத்திற்கு மெகா லக்கி பிரைஸ்
கடலூர்: மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.7,611 கோடியும், கேரளாவிற்கு ரூ.3,795 கோடியும் என மொத்தம் ரூ.11,406 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளை விடக் கூடுதல் நிதியைப் பெற்றுள்ள இந்த ஒதுக்கீடானது, இரு மாநிலங்களிலும் நிலுவையில் உள்ள புதிய ரயில் பாதை மற்றும் உட்கட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்த உதவும் என்றும் தெரிவித்துள்ளார்..
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் சுமார் 7,611 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மாநிலத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது...

கடலூர் ரயில்வே ஸ்டேஷன்
இது குறித்து சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்ந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டதடன், சில முக்கிய தகவல்களை தெரிவித்தார்..
"கடந்த பட்ஜெட்டில் 6,331 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை அது 7,611 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது தமிழக ரயில்வே வரலாற்றில் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இந்த நிதியுதவியின் மூலம் தமிழகத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மற்றும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பல ரயில்வே திட்டங்கள் மீண்டும் உயிர் பெறவுள்ளன.
மத்திய அரசு பட்ஜெட் நிதி
எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் நடைபெறும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்திட தமிழக அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்.
குறிப்பாக, பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மாமல்லபுரம் - கடலூர் இடையிலான புதிய ரயில் பாதை பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான தீவிர பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலூர் ஹேப்பி நியூஸ்
அதேபோல், சென்னை எழும்பூர் மற்றும் மதுரை போன்ற முக்கிய ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் பணிகள் இந்த நிதியின் மூலம் விரைவுபடுத்தப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் நடைமேடை மற்றும் தண்டவாளபணிகள் மே மாதத்திற்குள் நிறைவடையும்.. அதன் பிறகு அங்கிருந்து இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் பழையபடி இயக்கப்படும்..
சென்னை வாசிகளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாதமே ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்ய உள்ளார்.
தெற்கு ரயில்வே குட்நியூஸ்
அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு, மார்ச் முதல் வாரத்தில் இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை, ரயில்வே தரப்பிலான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டாலும், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய அணுகுசாலை மற்றும் நடைமேம்பாலப் பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்...
மேலும் தமிழகத்தின் புதிய ரயில் பாதை திட்டங்களுக்குத் தேவையான நிலத்தை விரைவாக கையகப்படுத்த மாநில அரசுடன் ரயில்வே துறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்..
மத்திய அரசு நிதி
வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் "கவச்" போன்ற நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதிலும் தமிழகத்திற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
ஒட்டுமொத்தமாக, இந்த பட்ஜெட் தமிழகத்தின் ரயில்வே உட்கட்டமைப்பை நவீனப்படுத்துவதுடன், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மத்திய அரசு அக்கறை காட்டி வருவது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது...!!












Click it and Unblock the Notifications