கடலூரில் கல்யாணம் ஆன 2 மாதத்தில்.. மனைவி 8 மாத கர்ப்பம்..அதிர்ந்த கணவர்! தாய்மாமன் செய்த கொடூர செயல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: திருமணம் ஆன இரண்டரை மாதத்தில் புதுப்பெண் ஒருவர் 8 மாதம் கர்ப்பமானதால் அதிர்ச்சியடைந்த கணவர், தன் மனைவி கர்ப்பம் ஆக காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் புதுப்பெண்ணின் தாய்மாமா தான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் 25 வயது ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதே மாவட்டத்தில் வசித்து வரும் 18 வயது ஆன காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடந்தது.

Cuddalore crime marriage

வயிறு வலிப்பதாக கூறிய மனைவி

திருமணம் ஆகி ரமேஷும் காவ்யாவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் தனக்கு வயிறு வலிப்பதாக காவ்யா கணவரிடம் கூறி வந்ததாகவும், அவரும் மருத்துவமனைக்கு போகலாம் என சொல்லியதாகவும் கூறப்படுகிறது. அதன்படி சம்பவத்தன்று அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்கள்.

8 மாதம் கர்ப்பம்

அப்போது மருத்துவர் சொன்ன வார்த்தையை கேட்டு கணவர் ரமேஷ் ஆடிப்போனார். மருத்துவர் உங்கள் மனைவி 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இதனால் கணவர் ரமேஷ் மனம் உடைந்து போனார். திருமணம் ஆகி 2 மாதங்கள் தானே ஆகியிருக்கு.. அதற்குள் எப்படி என ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளார்.

இது பற்றி மனைவியிடம் கேட்டதற்கு அவர் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ் இது பற்றி போலீசில் புகார் அளித்தார். மனைவியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்து இருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தாய்மாமா தான் காரணம்

இதில் காவ்யாவின் தாய்மாமன் கணேஷ் (பெயர் மாற்றம்) என்பவர் தான் காரணம் என்பது தெரியவந்தது. கணேஷுக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் அவர் தன் அக்காள் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது கணேஷ் தன் அக்காள் மகள் என்றும் பாராமல் அக்காள் வீட்டில் இல்லாத நேரத்தில் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

நைசாக ஆசை வார்த்தை கூறி காவ்யாவிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் தான் புதுப்பெண் காவ்யா கர்ப்பம் ஆனது தெரியவந்தது. கணேஷிடம் விசாரணைக்கு சென்ற போது தான் அவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றதும், அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+