கடலூரில் எலக்ட்ரிக் பைக்குக்கு சார்ஜ் போட்டதுமே.. இனியவன் வீட்டில் நம்ப முடியாத ஆச்சரியம்.. என்னவாம்
கடலூர்: நாட்டில் இன்று எங்கே பார்த்தாலும் இ - பைக்குகளை நம்மால் பார்க்க முடிகிறது.. காரணம், பெட்ரோல் விலையேற்றம், சுற்றுச்சூழல் அக்கறை, பராமரிப்பு செலவு குறைவு போன்ற காரணங்களால் நம்முடைய தமிழகத்திலும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அப்படித்தான் இ - பைக்குகளை கடலூர் இனியன் ஆசைப்பட்டு வாங்கியிருக்கிறார். என்ன நடந்தது?
கடந்த 5 வருட காலமாகவே, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்களில் இ பைக்குகளின் பயன்பாடு அதிகமாகி விட்டதாக கூறுகிறார்கள்,.. காரணம், ஆபீஸ் செல்பவர்கள், டெலிவரி பணிகள், கல்லூரி மாணவர்களின் பயன்பாடு போன்றவை காரணமாக இ-பைக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இ-பைக்குகள்
மாதந்தோறும் பெட்ரோலுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்வதைவிட, இ-பைக்கில் சார்ஜிங் செலவு மிகவும் கம்மியாகும்.. அதனால் நடுத்தர மற்றும் இளம் வயதினர் மத்தியில் இதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு தமிழக அரசு இதற்காக மானியம் வழங்குகிறது..
இதனை தவிர, வாகன பதிவு கட்டணங்களில் சலுகை, சாலை வரி விலக்கு போன்ற ஊக்குவிப்பு விஷயங்களும்கூட, இ-பைக்குகளின் விற்பனையை மத்தியில் தூண்டியுள்ளது. இதனால் இளைஞர்கள் மட்டுமல்ல, பெண்கள், வயதானவர்களாலும் ஈஸியாக ஓட்ட முடியும் என்பதால், இ பைக்குகள் அவர்களிடமும் கவனம் பெற்று வருகிறது.
இ பைக் - சார்ஜிங் வசதிகள்
ஆனாலும், கிராமப்புறங்களில் இன்னும் இ பைக்குகளின் பயன்பாடு குறைவாக உள்ளதாம்.. ஏனென்றால் சார்ஜிங் வசதிகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக கிடைப்பதில்லை.. நீண்ட பயணம் என்றால் இன்னும்கூட, வாகன ஓட்டிகள் நம்புவது பெட்ரோல் வாகனங்களைதான்..
இப்போதுதான், சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஆங்காங்கே தமிழகத்தில் மெதுவாக அதிகரித்து கொண்டிருக்கின்றன.. பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்குகள், மெட்ரோ ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள் அருகில் என சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.. நாளடைவில் இது அதிகரிக்கும் என தெரிகிறது.
மலைப்பிரதேசங்களிலும் இந்த வசதி மெல்ல தலைதூக்குகிறது.. கடந்த மாதம்தான் ஊட்டியிலும் சார்ஜிங் ஸ்டேஷன் கொண்டுவரப்பட்டுள்ளது.. எப்படியும் அடுத்த சில வருடங்களில் பெட்ரோல் பைக்குகளுக்கு நல்ல மாற்றாக இந்த இ-பைக்குகள் வந்துவிடும் என்றே தெரிகிறது. அந்த அளவுக்கு மிகுந்த முக்கியத்துவமும், ஆர்வத்தையும் பெற்று வருகிறது.
கடலூர் இனியவன்
ஆனால், கடலூரில் நடந்த ஒரு சம்பவம், பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. அங்குள்ள ஒரு வீட்டிலும் இ-பைக் வாங்கி இருக்கிறார்கள்.. என்ன நடந்தது தெரியுமா?
கடலூர் அண்ணா நகரில் வசித்து வருபவர் இனியவன் சேது... இவர் அங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அக்கவுண்ட்டண்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் 2 எலக்ட்ரிக் பைக்குகள் உள்ளன... இதனை தவிர, பெட்ரோல் பைக் ஒன்றும் உள்ளது.. மொத்தம் 3 பைக்குகளை இனியவன் சேது வைத்துள்ளார்.
3 பைக்குகள்
நேற்றைய தினம், தன்னுடைய வீட்டில் 3 பைக்குகளையும் நிறுத்தி வைத்துள்ளார்.. அதில், இ பைக் ஒன்றுக்கு சார்ஜ் போட்டுவிட்டு வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.
கொஞ்ச நேரத்திலேயே அந்த இ பைக் எரிந்துவிட்டது.. அதேபோல பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகளும் எரிந்து போனது... இதனை தவிர, 2 சைக்கிள்கள், மின் மோட்டார் உள்ளிட்ட பல பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இனியவன் சேது, உடனடியாக கடலூர் புதுநகர் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தந்தார்.. இதையடுத்து போலீசாரும், கடலூர் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ரூ.3 லட்சம்
மேலும், வீட்டில் தீப்பற்றி எரிந்த இ பைக்கின் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.. சார்ஜ் போடப்பட்ட இ பைக்குடன் சேர்த்து 3 பைக்குகளும் எரிந்து நாசமானது, கடலூரில் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.
கடலூரில் வீட்டில் சார்ஜ் போட்டு வைத்திருந்த இ-பைக் உடன் மேலும் 2 பைக்குகள், மின் மோட்டார் என பல பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எரிந்த பைக்குகள் உள்ளிட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாம்...!!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications