கடலூர் அருகே முன்விரோதம்- ஒருவர் வெட்டிக் கொலை- வீடுகள், படகுகள் தீக்கிரை
Subscribe to Oneindia Tamil
தாழங்குடா: கடலூர் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அங்கு வீடுகள், படகுகள் தீக்கிரையாக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

கடலூர் தாழங்குடாவில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து.

இதில் 25-க்கும் மேற்பட்ட படகுகள் தீக்கிரையாகின. 20 மீன்பிடி வலைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் கடற்கரையோரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.













Click it and Unblock the Notifications