சிதம்பரம் கொத்தட்டை சுங்க சாவடியை முற்றுகையிட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள்- சுமூக முடிவு!
கடலூர்: விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க சாவடி வழியே 50 முறை ஒரு தனியார் பேருந்து சென்று வந்தால் ரூ14,090 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். மேலும் கொத்தட்டை சுங்க சாவடியையும் முற்றுகையிட்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கசாவடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொத்தட்டை சுங்க சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கொத்தட்டை சுங்க சாவடி வழியாக 50 முறை சென்று வந்தால் ரூ14,090 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பது தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை. இந்த கோரிக்கையை முன்வைத்து கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் கொத்தட்டை சுங்க சாவடியை முற்றுகையிட்டும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும் இன்று மட்டும் தனியார் பேருந்துகள் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications