கடலூர் கள்ளக்காதல்.. படுக்கையிலேயே பிளான் போட்ட பத்மா.. விடியற்காலையில் நடந்த வில்லங்கம்
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த 62 வயதாகும் கொளஞ்சியப்பன் என்பவர் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு வருடம் முன்பு பணியில் ஓய்வு பெற்ற கொளஞ்சிப்பன் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கொளஞ்சியப்பனுக்கும் இளம் பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளதாம். இதை அறிந்த மனைவி பத்மாவதி கேட்டுள்ளார். அப்போது அவர்,கள்ளக்காதலிக்கு வீட்டை எழுதி கொடுத்து விடுவேன் என்று கூறினாராம். இதனால் கோபம் அடைந்த பத்மாவதி என்ன செய்தார் தெரியுமா? அது பற்றி பார்ப்போம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பி-2 மாற்றுக்குடியிருப்பை சேர்ந்த 62 வயதாகும் கொளஞ்சியப்பன் என்பவர் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி வீரலட்சுமி, இறந்துவிட்டார். எனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 47 வயதாகும் பத்மாவதி என்பவரை கொளஞ்சியப்பன் 2-வது திருமணம் செய்து கொண்டார். ஊழியராக பணிபுரிந்த கொளஞ்சியப்பன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். தற்போது இந்திரா நகரில் உள்ள துணிக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கள்ளக்காதல்
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொளஞ்சியப்பனுக்கு இந்திராநகர் 2-வது தெருவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாம். நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தார்களாம்.
கோபம் அடைந்த பத்மா
இதுபற்றி அறிந்தது கோபம் அடைந்த பத்மாவதி, கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கொளஞ்சியப்பனிடம் கூறினார். அதற்கு அவரது கணவர் மறுத்துவிட்டாராம். இந்த விவகாரத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டபோது, வீட்டை கள்ளக்காதலிக்கு எழுதி கொடுத்து விடுவேன் என்று கொளஞ்சியப்பன் மிரட்டியிருக்கிறாராம். இது பத்மாவதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாம். ஆனால் ஆத்திரத்தை அவர் வெளிக்காட்டாமல் இருந்தாராம்.
கடப்பாரையால் பதிலடி
இதனிடையே நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்த கொளஞ்சியப்பன் சாப்பிட்டுவிட்டு தூங்கினாராம். அதிகாலை 2.15 மணி அளவில் பத்மாவதி திடீரென கண் விழித்துள்ளார். அப்போது தூங்கிக்கொண்டிருந்த கணவரை பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளதாம். கள்ளக்காதலிக்கு வீட்டை எழுதி வைக்க போறீயா என்ற ஆத்திரத்தில் இருந்த பத்மாவதி, வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து கொளஞ்சியப்பனின் தலையில் ஓங்கி குத்தினாராம். தலையில் கடப்பாரை துளைத்து அந்த இடத்திலேயே கொளஞ்சியப்பன் உயிரிழந்தார்.
பத்மா கைது
இந்த சம்பவம் பற்றி நெய்வேலி டவுன்ஷிப் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொளஞ்சியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொளஞ்சியப்பனின் தம்பி பிரபாகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மாவதியை கைது செய்தனர். இந்த சம்பவம் நெய்வேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications