"அது" விஷயமே வேற.. கடலூரை கலங்கடித்த செல்வி.. வீட்டில் நுழைந்து பார்த்தால்.. ஐய்யயோ சைக்கிள் செயினா?
கடலூர்: கணவனை இழந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். என்ன நடந்தது? யார் இந்த செல்வி?
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மண்டையூர் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் டேனியல்.. 61 வயதாகிறது.. கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகாவை சேர்ந்தவர் இந்த டேனியல்.. இவரது ஒரிஜினல் பெயர் வீராசாமி.

மதபோதகர்: கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, மதபோதனைகளில் ஈடுபட்டு வந்தார்.. அங்கிருக்கும் மாத்தூர், மண்டையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் மத போதக பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
அங்கிருக்கும் வீடுகளுக்கு சாயங்கால நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களை பாடி, ஜெபம் செய்து விட்டு வருவாராம். அப்படி அந்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு ஜெபம் செய்ய போனபோதுதான், செல்வி என்ற பிரின்சி அறிமுகமானார்.
செல்வி: செல்விக்கு 46 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் சங்கர்.. ஆனால், அவர் இறந்துவிட்டார்.. செல்வி தனிமையில் இருந்து வந்த நிலையில், டேனியலின் அறிமுகம் கிடைத்துள்ளது.. நாளுக்கு நாள் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்த நிலையில், தகாத உறவு வரை கொண்டுசென்றுவிட்டது.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, டேனியல் வீட்டுக்கே சென்றுவிட்டார் செல்வி.. இந்த 2 மாதமாக அங்குதான் தங்கி வந்துள்ளார்.. நேற்று காலை 6 மணிக்கு டேனியல் வீட்டின் வாசலில், செல்வி அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தார்.. அப்போது, பக்கத்து வீட்டுக்காரர்கள், செல்வியிடம் வந்து, என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்கள். அதற்கு செல்வி, டேனியலை கொன்றுவிட்டேன், வீட்டிற்குள் சடலத்தை வைத்திருக்கிறேன் என்று சொல்லி உள்ளார்.
டேனியல்: இதைக் கேட்டு அதிர்ந்துபோன பக்கத்து வீட்டுக்காரர்கள், உடனடியாக மண்டையூர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் டேனியல் வீட்டுக்கு விரைந்து வந்தனர்.. உள்ளே சென்று டேனியலின் சடலத்தை பார்வையிட்டனர்.. பிறகு செல்வியிடம் விசாரணை ஆரம்பமானது..
"டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார்... அவர்மீது எனக்கு கோபம் அதிகமாகிவிட்டது.. அந்த ஆத்திரத்தில், அவரை கீழே தள்ளிவிட்டேன்.. உடனே அவர் மயக்கமாகிவிட்டார்.
செக்ஸ் டார்ச்சர்: மறுபடியும் மயக்கம் தெளிந்து செக்ஸ் டார்ச்சர் தருவார் என்பதால், அவரை கொன்றுவிட முடிவு செய்தேன். இதற்காக வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த, பைக்கில் கழற்றிவைக்கப்பட்ட செயின் ஸ்பிராக்கெட் மூலம் அவரது முகத்திலும் தலையிலும் வெட்டினேன். இதனால் ரத்தம் பொலபொலவென கொட்டியது.. அளவுக்கு அதிகமான ரத்த இழப்பு ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்" என்றார்.
செல்வியின் வாக்குமூலத்தையடுத்து, மத போதகர் டேனியல் உடலை போலீஸார் கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்... இப்போது செல்வியை ஜெயிலில் அடைத்துள்ளனர்.. விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணை: ஆரம்பத்தில் இவர்கள் 2 பேருக்கும் நெருக்கம் அவ்வளவாக இல்லாமல் இருந்திருக்கிறது.. செல்வியை தன்னுடைய வீட்டிற்கு வருமாறு டேனியல்தான் அழைத்துள்ளார்.. தான் தனியாக தங்கியிருப்பதாகவும், சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் ஒருவர் தேவை என்றும் கூறியிருக்கிறார்.
அதைக் கேட்ட செல்வி, 'எனக்கும் கணவர் இல்லை. வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறேன். சமையல் செய்வதற்கு வெளியாள் எதற்கு? நானே உங்களுக்குச் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் செய்வதற்கு வருகிறேன்' என்று சொன்னாராம். 2 மாதங்களுக்கு முன்புதான், டேனியல் வீட்டுக்கு சென்று தங்கி, அங்கேயே வேலை பார்த்துவந்திருக்கிறார். அப்போதுதான், செக்ஸ் தொல்லை ஆரம்பமாகியிருக்கிறது.
பல் சக்கரம்: சம்பவத்தன்று இப்படித்தான், அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக்கொண்டு டார்ச்சர் தந்திருக்கிறார்.. பிறகு, அதிகாலை 2 மணிக்கு மீண்டும் பாலியல் உறவுக்கு டேனியல் அழைத்துள்ளார். அப்போதுதான் ஆத்திரம் தாங்காமல், சைக்கிள் பல் சக்கரத்தால் அடித்து கொலை செய்திருக்கிறார் செல்வி.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications