'தீண்டாமை கடைப்பிடிக்கும் தீட்சிதர்கள்..' சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்க களமிறங்கிய கவுதமன்
கடலூர்: தீட்சிதர்களிடம் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநரும் தமிழ்ப்பேரரசு கட்சி பொதுச் செயலாளருமான கவுதமன் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் "கனவே கலையாதே", "மகிழ்ச்சி" ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் கவுதமன். இவர் சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
மேலும், தமிழ்ப்பேரரசு கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் கவுதமன், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளார்.

ஆட்சியரிடம் மனு
சமீபத்தில் ஜெய் பீம் தொடர்பான சர்ச்சை எழுந்த போதும் கூட, நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கவுதமன் வலியுறுத்தியிருந்தார். இந்தச் சூழலில் தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் சிவனடியார்களுடன் வந்து கடலூர் மாவட்ட நாச்சியார் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தார்.

தீண்டாமை
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, "சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களை அடித்து அவமானப்படுத்துவது மட்டுமின்றி, தங்களின் சொகுசு வாழ்க்கைக்காகக் கோயிலை சிதைத்து வரும் தீட்சிதர்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் கோயிலை மீட்க வேண்டும். திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார்களையும், பக்தர்களையும் அனுமதிக்காமல் தீண்டாமை நிலை திட்டமிட்டு தீட்சிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மீட்டு தர வேண்டும்
ஆகம விதிகளை மீறி கோயிலை விடுதி போல் அலங்கரித்து ஒரு திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் சாமி கும்பிட வரும் பக்தர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஆகவே சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு மீட்காவிட்டால் தமிழ்ப்பேரரசு கட்சி போராட்டம் நடத்தும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ 3 கோடி என்ன ஆனது
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2009ஆம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகள் இந்து சமய அறநிலையத்துறை வசம் இந்த கோயில் இருந்தபோதும் கூட வருமானமாகப் பெறப்பட்ட 3 கோடி ரூபாய் காணிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை. கோயிலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார் தீட்சிதர்களிடம் இருந்து சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க வேண்டும் என இயக்குநர் கவுதமன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications