கடலூர் டாஸ்மாக் முன்பு ஆவேசமான குடிமகன்.. 'இது டுபாக்கூர் சரக்கு..' ஃபுல் போதையில் புலம்பல்
கடலூர்: தான் வாங்கி குடித்த மது போலி என்றும். உடலுக்கு கேடு விளைவித்துவிடும் என்றும் குற்றம்சாட்டிய போதை ஆசாமி ஒருவர், கடலூர் அருகே டாஸ்மாக் கடை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடலூர் அருகே டாஸ்மாக்கில் மதுவாங்கிய குடிமகன், அதுபற்றி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசுகையில்,மதுபானத்தை பொறுத்தவரை பச்சை கலர் சிம்பள் இருந்தால் மட்டுமே நாம் குடிக்கலாம். இது எம்பிசி.. கடைகளில் இதுபோன்ற டுபாக்கூர் சரக்கு தான் போடுறாங்க.. எனக்கு மாரடைக்கிறது..

எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.நான் என்ன செய்வது? பாட்டில் ஒன்றாக இருக்கிறது. பிராண்ட் வேறயாக இருக்கிறது என்று புலம்பினார். முன்னதாக டாஸ்மாக்கில் விற்பனையாளர்களிடம் மதுவின் தரம் குறித்து கேள்வி எழுப்பி மல்லுக்கட்டினார். வரி கட்டும் தனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று முறையிட்டார். கேட்கிற பிராண்ட் சரக்குகள் கிடைப்பது இல்லை என்று அவர்களிடம் சண்டையிட்டார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு வகையான மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில பிராண்டுகள் மட்டுமே எளிதாக கிடைப்பதாகவும் சில பிராண்டுகள் கிடைப்பது இல்லை என்று குற்றச்சாட்டுகளை மதுப்பிரியர்கள் அவ்வப்போது வைப்பது உண்டு. அதேபோல் மதுபோதை போதிய அளவில் ஏறவில்லை என்றால், இன்னொரு குவாட்டர் வாங்க வேண்டிய நிலை இருப்பதாவும், போதை சரியாக ஏறாத சரக்கை டுபாக்கூர் சரக்கு என்றும் விமர்சிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் அடிக்கடி இப்படி விமர்சிப்பதும் உண்டு.
இதேபோல் டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 20 ரூபாயும், புல் பாட்டிலுக்கு 40 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக குடிமகன்கள் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வரும் டாஸ்மாக் நிர்வாகம், இந்த புகாரில் சிக்கும் ஊழியர்கள் கண்டிப்பாக உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க பில்லிங் முறையையும் சோதனை அடிப்படையில் பல்வேறு கடைகளில் அறிமுகம் செய்துள்ளது.. ஆனால் இந்த பஞ்சாயத்து இன்று வரை தீரவில்லை என்று குடிமகன்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications