கடலூரில் டபுள் மீனிங்கில் பேசிய பெண்.. சபலத்தில் விழுந்த 61 வயது நபர் உல்லாசம்.. 7 பவுன் தங்க நகை?
கடலூர்: கடலூரில் நடந்த கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. தொழில்நுட்பங்கள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் மோசடிகளும் பெருகி வருவதை மறுக்க முடியாது. திருமண மோசடிகளுக்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கில்லை என்றாலும், தொழிலதிபர்களையும், வசதி படைத்தவர்களையும் ஏமாற்றி பணம் நகை பறிக்கும் செயல்களும் நடந்து கொண்டுதான் உள்ளன. இப்போது சென்னையில் நடந்த கொடுமையை பாருங்கள்
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த அந்த முதியவருக்கு 61 வயதாகிறது.. இவர் கடந்த 16ம் தேதி செந்துரை பகுதிக்கு பைக்கில் சென்றிருக்கிறார்..

அப்போது அவரிடம், பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.. திட்டக்குடி பகுதியில் தன்னுடைய வீடு உள்ளதால், திட்டக்குடி பார்டரில் டிராப் செய்தால் போதும் என்று கெஞ்சி கேட்டுள்ளார்.. இதனால் மனம் இரங்கிய முதியவரும், இளம்பெண்ணை பைக்கில் ஏற்றி கொண்டார்.
பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, நைசாக முதியவரிடம் பேச்சு தந்த அந்த பெண்,
என்னுடைய மகளுக்கு உடம்பு சரியில்லை.. அதனால் குழுமூர் வரை கொண்டுபோய் பைக்கில் விட்டு விடுங்களேன் என்றார்..
பிறகு வழியெல்லாம் பைக்கில் முதியவரிடம் டபுள் மீனிங்கில் பேசி கொண்டே வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் பேச்சில், முதியவர் மயங்கிவிட்டார்.. பிறகு இளம்பெண்ணுடன் முதியவர் உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்..
முதியவருடன் உல்லாசம்
சிறிது நேரத்தில் அப்பெண்ணை தேடி அவரது ஆண் நண்பர் அங்கு திடீரென வந்து நின்றார்.. உடனே ஆண் நண்பரும், அந்த பெண்ணும் சேர்ந்து முதியவரை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.. அவர் கழுத்தில், கையில் அணிந்திருந்த 7 சவரன் நகையை பறித்து கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தனர்.
இந்த தாக்குதலில் முதியவர் படுகாயமடைந்தார்.. பிறகு பதறியடித்து கொண்டு, தளவாய் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் செய்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.. மேலும், அந்த பகுதியிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் அப்பெண்ணை பற்றின தகவல்கள் கிடைத்தன.
கில்லாடி பெண்
அதாவது சம்பந்தப்பட்ட கில்லாடி பெண், அரியலூர் மாவட்டம் ஆண்டி மடல் அருகே உள்ள சிலம்பூரை சேர்ந்தவராம்.. அந்த பெண்ணுக்கு 35 வயதாகிறது.. பாஞ்சாலை என்பது அவரது பெயர்.. கலையரசி என்று மற்றொரு பெயரும் உள்ளது.
இவரது ஆண் நண்பர் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள மேல குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 30 வயது நவீன் குமார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையுமே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகளையும் மீட்டனர்..
இதையடுத்து 2 பேரையும் செந்துறை போலீசார் கைது செய்து, கலையரசியை திருச்சி மகளிர் ஜெயிலிலும், நவீன்குமாரை அரியலூர் ஜெயிலிலும் அடைத்துள்ளனர். பெண்ணின் பேச்சில் சபலப்பட்டு, அடி உதை வாங்கிய முதியவரின் இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை தந்து வருகிறது.
தூத்துக்குடி அதிமுக பிரமுகர்
தூத்துக்குடி உடன்குடி பகுதியிலும் கடந்த வாரம் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது.. அந்த நபர் பிரபல அதிமுக நிர்வாகி ஆவார்.. சொந்தமாக நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.. சில தினங்களுக்கு முன்பு அதிமுக பிரமுகரிடம் இளம்பெண் ஒருவர் தானாகவே வலிய வந்து பேசி அறிமுகமாகியிருக்கிறார்.
போன் நம்பரை வாங்கி அதிமுக பிரமுகரிடம் ஓயாமல் பேசி வரவும், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் பேச்சில் மயங்கினார்..
மணலில் புதைத்த கொடுமை
ஒருநாள் இருவரும் தனிமையில் சந்திக்கவும் முடிவு செய்து, திருச்செந்தூர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது இளம்பெண்ணின் ஆண் நண்பர்கள் 4 பேர் திடீரென சொகுசு காரை வழிமறித்து, அதிமுக பிரமுகரின் கை, கால்களை கட்டி, கடலோர பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்..
அங்கே அவரை தாக்கி துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்தி வீடியோ, போட்டோக்களை எடுத்துள்ளனர். பிறகு தலை மட்டும் வெளியே தெரியும் அளவிற்கு மணலில் அவரை புதைத்துவிட்டு, ரூ.50 லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
அதிமுக பிரமுகரும் தனக்கு தெரிந்த நபர்களுக்கு போனை போட்டு 50 லட்சம் கேட்டு கெஞ்சியிருக்கிறார்.. விளையாட்டுக்கு கேட்பதாக நினைத்து நண்பர்கள் யாருமே பணம் தரவில்லையாம்.. இதனால் நொந்துபோன மர்மகும்பல், அதிமுக பிரமுகரை விடுவித்துவிட்டு போனது நினைவிருக்கலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications